தம்பி அன்பில் மகேஷுக்கு அண்ணன் அன்பாக கோரிக்கை வைக்கிறேன்.. ஆசிரியர்களை சந்தித்த பின் சீமான் பேட்டி
சென்னை: அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவே ஆசிரியர்கள் போரடுகிறார்கள் என்றும் எனவே இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி 5-வது நாளாக உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை சந்தித்த பிறகு சீமான் இவ்வாறு கூறினார்.
தமிழகத்தில் கடந்த 2009- ஆம் ஆண்டுக்கு பின்னர் பணியில் சேர்ந்த இடை நிலை ஆசிரியர்களுக்கும் அதற்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு இடையே ஊதிய முரண்பாடுகள் உள்ளன.
எனவே அதனைக் களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் குடும்பத்துடன் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

5-வது நாளாக போராட்டம்
டிபிஐ வளாகத்தில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. போராடும் ஆசிரியர்களை சந்தித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், இடை நிலை ஆசிரியர்களின் போராட்டம் 5-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போராடும் ஆசிரியர்களை நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது
பின்னர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம் கடந்த ஆட்சியிலும் நடந்தது. கடந்த ஆட்சியில் நடந்த போராட்டத்தில் நீங்க வந்து பங்கேற்றீங்க.. 2018ல் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டதோடு உறுதி அளித்தீர்கள். இப்போது அதிகாரத்திற்கு வந்து வீட்டீர்கள். இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போதும் அந்த கோரிக்கையை நிறைவேற்றுங்க என கேட்கிறார்கள். நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்றே கேட்கிறார்கள்.

இரு கட்சிகளும் மாறி மாறி..
கோரிக்கையும் புதிது அல்ல. போராட்டமும் புதிது அல்ல. 5 வது வருஷத்தில் அடுத்த 5 வருஷத்தில் நிறைவேற்றுவோம் என்று சொல்வார்கள். இதை 5 வயதில் இருந்தே பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இரண்டு கட்சிகளும் மாறி மாறி பேசி வருகின்றன. ஸ்டெர்லைட் ஆலையை திறந்ததும் பெருமக்கள்தான். இப்போது ஸ்ட்ரெலைட் பற்றி பேசுவது என்றாலும் உங்கள் கூட்டத்திற்கே அனுமதி இல்லை.

நீங்கள் போய் வகுப்பு எடுப்பீர்களா..
ஸ்ட்ரெலைட் ஆலையை நீங்கள் எதிர்க்கிறீர்களா.. இல்லை ஆதரிக்கிறீர்களா? இந்த சிக்கல் பற்றி பேச தனிகூட்டம் தனி மேடை இருக்கு..இந்தக் கூட்டத்தில் ஆசிரியர்களின் போராட்டம் மிக நியாயமானது. புனிதமானது. பள்ளிக்கூடம் கட்டிவிட்டீர்கள். மக்களிடம் காசை வாங்கி புனரமைப்பு பணிகளையும் செய்து விட்டீர்கள். பாடம் நடத்தப்போவது யார்? பாடம் நடத்தப்போகிறவர்கள்தான் பட்டினியாக தெருவில் கிடக்கிறார்களே.. நீங்கள் போய் வகுப்பு எடுப்பீர்களா..

தம்பி அன்பில் மகேஷுக்கு அன்பு கோரிக்கை
பார்த்து படிக்கும் போதே பத்து பிழை வருகிறது. நீங்கள் பாடம் நடத்துனா? மாணவன் எப்படி உருப்படுவான். எனவே பாடம் நடத்துபவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து அவர்களை பாடம் எடுக்க அனுப்புங்கள். நான் பெரிதும் அன்பு வைத்திருக்கிற தம்பி மகேஷ்.. போராடும் ஆசிரியர்களை அழைத்துப்பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று அண்ணன் அன்பாக கோரிக்கை வைக்கிறேன்" என்றார்.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications