சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தொழில்துறை இல்லை! தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

Google Oneindia Tamil News

சென்னை : தொழில்துறையின் பெயரை தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதி காலை கேள்வி நேரத்திற்கு பிறகு தொழில்துறை மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

Tamil Nadu Industry Department name changed to Industry Investment Promotion Commerce Department

இந்த விவாதத்திற்கு பிறகு பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும் தொழில்துறையின் பெயரை தொழில் முதலீட்டு ஊக்கவிப்பு மற்றும் வர்த்தகத் துறை என மாற்றம் செய்யப்படும் என்று அறிவித்தார்.

இந்நிலையில் தொழில்துறையின் பெயரை தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மனிதவள மேலாண்மை துறை செயலாளர் மைதிலி கே.ராஜேந்திரன் வெளியிட்ட அரசாணையில்," தொழில் துறை என்று அழைக்கப்பட்டு வந்த அரசு துறை இனி தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை என்று அழைக்கப்படும். அதற்கு ஏற்ற வகையில் அரசு விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

தமிழக தொழில்துறை அமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசு இனி தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகம், தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் என அழைக்கப்படுவார்.

English summary
The Tamil Nadu government has issued an ordinance renaming the industry as Industry, Investment Promotion and Trade Department.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X