Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம்.. திராவிட மாடலுக்கு மற்றுமொரு மணிமகுடம் என உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டிலேயே அதிக தொழிற்சாலை மற்றும் நாட்டிலேயே அதிக வேலைவாய்ப்பு வழங்கி உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. 2022-23-ம் ஆண்டு தமிழகம் 27 லட்சத்து 74 ஆயிரத்து 244 வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திராவிட மாடலுக்கு மற்றுமொரு மணிமகுடம் என்று நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் யார் ஆட்சி செய்தாலும் கல்விக்கும், வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். கடந்த 60 ஆண்டுகளில் கல்வியால் ஒரு மாநிலம் முன்னேறி உள்ளது என்றால்,. அது நிச்சயம் தமிழ்நாடு தான். 1960களில் மிகவும் பின்தங்கிய மாநிலமாக இருந்த தமிழ்நாடு, தொழில் வளர்ச்சி இன்று முன்னேறிய மாநிலமாக இருக்க காரணம், கல்விக்கு கொடுத்த முக்கியத்துவமே காரணம் ஆகும்.

tamil nadu udhayanidhi stalin central government

நாடு தழுவிய 2022-23-ம் ஆண்டுக்கான மதிப்பீட்டு அறிக்கையை மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகம் தொழிற்துறை வெளியிட்டுள்ளது. அதில் நாடு முழுவதும் ஒரு கோடியே 84 லட்சத்து 94 ஆயிரத்து 962 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கியதில் முன்னணியில் இருக்கும் முதல் 5 மாநிலங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், 15 சதவீத பங்களிப்பினை வழங்கி தமிழ்நாடு நாட்டிலயே முதல் இடத்தில் உள்ளது.

கடந்த 2022-23-ம் ஆண்டு மட்டும் தமிழ்நாடு 27 லட்சத்து 74 ஆயிரத்து 244 வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளது. தமிழகத்துக்கு அடுத்தப்படியாக 12.84 சதவீத பங்களிப்பினை வழங்கி மகாராஷ்டிரா 2-வது இடத்திலும், 12.62 சதவீத பங்களிப்புடன் குஜராத் 3-வது இடத்திலும், 8.04 சதவீத பங்களிப்புடன் உத்தரப்பிரதேசம் 4-வது இடத்திலும், 6.58 சதவீத பங்களிப்புடன் கர்நாடகா 5-வது இடத்திலும் இருக்கிறது.

இதேபோல நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் உள்ள மாநிலங்கள் பட்டியலில் 15.66 சதவீதம் பெற்று தமிழ்நாடு முதல் இடத்தில் இருப்பதாக மத்திய அரசு தனது புள்ளி விவரத்தில் கூறியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக 12.25 சதவீதத்துடன் குஜராத் 2-வது இடத்திலும், 10.44 சதவீதத்துடன் மகாராஷ்டிரா 3-வது இடத்திலும், 7.54 சதவீத பங்களிப்புடன் உத்தரப்பிரதேசம் 4-வது இடத்திலும், 6.51 சதவீத பங்களிப்புடன் ஆந்திரா 5-வது இடத்திலும் உள்ளது.

இந்த புள்ளி விவரங்கள் குறித்து சமூக வலைதளப்பக்கத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "திராவிட மாடலுக்கு மற்றுமொரு மணிமகுடம். இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளை கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்றும், அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதிலும் தமிழ்நாடு முதலிடம் என்றும் மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. கலைஞர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட தொழில் கொள்கையின் நீட்சியும், நமது முதல்வர் மு.க.ஸ்டாலினின் முயற்சியும் இப்போது நல்ல விளைச்சலை தந்துக்கொண்டிருக்கின்றன. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியால் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக 2030-ம் ஆண்டுக்குள் உயர்த்திடுவதற்கான பணிகள் நம் திராவிட மாடல் அரசால் தொடரும், உயரும்." என்று கூறியுள்ளார்.

தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், "நாம் கொண்டு வரும் லட்சக்கணக்கான கோடி முதலீடுகளில் ஒவ்வொரு ரூபாயும் நமது இளைஞர்களுக்கு தரமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டது என்று எங்களது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழுத்தமாக கூறி வருகிறார். தற்போது மத்திய அரசு வெளியிட்ட முடிவுகள் அதை பற்றி பேசுவதாக உள்ளது.

மத்திய அரசு வெளியிட்ட 2022-23 தொழில்துறை ஆண்டறிக்கையின்படி, இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள அனைத்து தொழில்துறை வேலைகளில் 15 சதவீத பங்களிப்பினை தமிழ்நாடு வழங்கியிருக்கிறது. தொழில்துறையில் நாம் நாட்டின் தலைசிறந்த வேலை கொடுப்பவராக மாறியிருப்பதை இது காட்டுகிறது. வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியில் நாம் இடைவிடாமல் கவனம் செலுத்தி வருவதற்கு இது ஒரு சான்றாகும். இதுதான் திராவிட மாடலின் செயல்பாடு." இவ்வாறு கூறியுள்ளர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+