நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு இறுதியானதா? குழப்பமா இருக்கே? தமிழக பத்திரப்பதிவு துறை சொல்வதென்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிலங்களுக்கான திருத்தி அமைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகள் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.. இதுகுறித்து பதிவுத்துறை சொல்வது என்ன?

தமிழகத்தில், நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை, குறிப்பிட்ட கால இடைவெளியில் பதிவுத்துறை வெளியிட்டு வருகிறது. அதாவது, தமிழ்நாடு முத்திரை விதிகள்படி, வருடந்தோறும் வழிகாட்டி மதிப்பு சீரமைக்கப்பட வேண்டும்.. இந்த மதிப்புகள் அடிப்படையில் இருக்கும் பத்திரங்கள் மட்டுமே பதிவுக்கு ஏற்கப்படும்.

Land Registration Land Guide Value interpretation

மைய மதிப்பீட்டுக் குழு: அந்தவகையில், இந்த வழிகாட்டி மதிப்பு சீரமைக்கவும், வழிகாட்டியிலுள்ள முரண்பாடுகளை களையவும் புதிய வழிகாட்டி மதிப்பு நிர்ணயித்தலுக்கான நெறிமுறைகள், கடந்த ஏப்ரல் 26ம் தேதி கூடி வகுத்தளித்தது. மைய மதிப்பீட்டுக் குழுவின் அறிவுறுத்தல்கள்படி, வரைவு சந்தை வழிகாட்டி தயாரிக்க அந்தந்த மாவட்டத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளும், பொதுமக்கள் கருத்து கேட்பதற்கான நடைமுறைகளும் வகுக்கப்பட்டன.

மக்களிடமிருந்து அறியப்பட்ட சொத்துக்களுக்கான சந்தை மதிப்பு மற்றும் விற்பனை புள்ளி விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, வரைவு வழிகாட்டி மதிப்பு தயாரிக்கப்பட்டு, துணை குழுக்களால் வரைவு வழிகாட்டி மதிப்புக்கு ஒப்புதல் பெறும் தீர்மானங்களும் அப்போது நிறைவேற்றப்பட்டன.

இணையதளம்: பிறகு, வரைவு வழிகாட்டி மதிப்பு பொதுமக்கள் பார்வையிட வழிகாட்டி பதிவேடுகள், பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக பதிவுத்துறை இணையதளம், சார்பதிவாளர், வட்டாட்சியர், அலுவலகங்களில் வைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க 15 நாட்கள் அவகாசமும் தரப்பட்டது.

இதையடுத்து, மாவட்ட துணைக்குழு 3வது முறையாக கூடி, வரைவு சந்தை மதிப்பு வழிகாட்டியின் மீது பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட ஆட்சேபனைகள், கருத்துக்களை பரிசீலித்து, முரண்பாடுகளை களைந்து, புதிய சந்தை வழிகாட்டி மதிப்பை அங்கீகரித்து, மைய மதிப்பீட்டுக் குழுவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது..

பதிவுத்துறை: இறுதியாக, பதிவுத்துறை தலைவர் தலைமையிலான மைய மதிப்பீட்டுக்குழு, கடந்த ஜூன் 29ம் தேதி கூடி, இதற்கு ஒப்புதல் அளித்ததையடுத்து, வழிகாட்டு மதிப்புகள் 10 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு, ஜூலை, 1 முதல் அமலுக்கு வந்துள்ளது..

இந்த வரைவு வழிகாட்டி மதிப்பு பட்டியலில் கிராமப்புறங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் நகர் பகுதிகளிலுள்ள முரண்பாடுகள் மட்டும் களையப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இந்த புதிய மதிப்புகள் குறித்த விபரங்கள் வெப்சைட்டிலும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதில், "நிலங்களுக்கான இந்த மதிப்புகள் இறுதியானதல்ல.. கட்டிடம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் மதிப்பீடு அடிப்படையில் மாறுதலுக்கு உட்பட்டது" என்று கூடுதலாக ஒரு குறிப்பு சேர்க்கப்பட்டிருக்கிறதாம்.

சார் பதிவாளர்கள்: இதுகுறித்து, சார்பதிவாளர்கள் சொல்லும்போது, "அரசு துறைகளால் பொதுவாக வழிகாட்டி மதிப்புகள்தான் ஆதாரமாக பார்க்கப்படுகின்றன... இப்போது அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கூட்டு மதிப்புகளும் சேர்த்து அறிவிக்கப்பட்டிருக்கின்றன.. இந்த மதிப்புகள், கட்டிடங்கள், துறை மதிப்பீடுகள் அடிப்படையில் மாறும் என பதிவுத்துறை குறிப்பிடுவது, மக்களை குழப்புவதாக அமைந்துள்ளது.

ஏற்கனவே, வழிகாட்டி மதிப்புகளில் புகார்கள் வருகின்றன... எனவே, கட்டிடங்களுக்கான மதிப்பு கணக்கிடும் வசதி, இதே வெப்சைட்டில் தனியாக உள்ளதால் மக்கள் அதை பயன்படுத்தி கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளனர்.

வழிகாட்டி மதிப்பு: நிலங்களுக்கான திருத்தி அமைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகள் இறுதியானதல்ல என்றும், கட்டிடம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் மதிப்பீடு அடிப்படையில் மாறுபடும் என்றும் பதிவுத்துறை தெரிவித்துள்ளது கவனம் பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+