என்னங்க “SIR" ஒரே குழப்பமா இருக்கு? விண்ணப்பத்தை நிரப்புவதில் குழப்பமா? சனி, ஞாயிறு ரொம்ப முக்கியம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழகத்தில் கடந்த நான்காம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 234 தொகுதிகளிலும் இந்த பணி நடைபெற்று வரும் நிலையில் பூத் லெவல் ஆபீஸர்கள் எனப்படும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பொதுமக்களுக்கு விண்ணப்ப படிவங்களை அளித்து, திரும்ப பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்காளர் கணக்கிட்டு படிவங்களை திரும்ப பெற சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த முகாம்களில் கணக்கிட்டு படிவத்தை பூர்த்தி செய்து வழங்கலாம் எனவும், ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

2026 இல் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பீகாரை போலவே தமிழகத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் அறிவித்தது. கடந்த நான்காம் தேதி முதல் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு வாக்காளரின் வீடுகளுக்கே சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர் கணக்கிட்டு படிவங்களை வழங்கி இருக்கின்றனர். இதுவரை 90 சதவீதத்திற்கும் மேல் வீடு வீடாக வாக்காளர் கணக்கிட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tamil Nadu Voter List election commission

எஸ்ஐஆர் வாக்காளர் திருத்தம்

இதில் வாக்காளர் புகைப்படத்துடன் விவரங்கள் இருக்கும் நிலையில் ஆதார் எண் உள்ளிட்ட அவற்றை எழுதி புதிய புகைப்படத்தை ஒட்டி, இரண்டாம் பகுதியில் பெற்றோர், உறவினர்களின் விபரங்களை அளித்து விண்ணப்பித்தை சமர்ப்பிக்க வேண்டும். ஒரு விண்ணப்பம் வாக்குச்சாவடி அலுவலருக்கும், மற்றொரு விண்ணப்பம் படிவம் வாக்காளர்க்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் இரண்டாவது போர்ஷன் அதாவது இரண்டாவது பகுதியில் வாக்காளர் பட்டியல் விவரங்கள் கேட்கப்படும் நிலையில் அதில் பெரும் குழப்பம் நிலவுகிறது.

பூத் லெவல் ஆபீசர்

தமிழக முழுவதும் கிட்டத்தட்ட ஆறு கோடிக்கு மேலான வாக்காளர்கள் இருக்கும் நிலையில் இதில் இரண்டாவது பகுதியை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பலரது வாக்கு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறுகின்றன. அதே நேரத்தில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தன்னார்வளர்களும் பொது மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். இந்த நிலையில் வாக்காளர் கணக்கிட்டு படிவங்களை திரும்ப பெறுவதற்கான சிறப்பு முகாம் வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் நடக்க இருக்கிறது.

சிறப்பு முகாம்

கிட்டத்தட்ட 25,000 மேற்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் மூலம் வீடு வீடாக கணக்கிட்டு படிவம் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த படிவத்தை திரும்ப பெறுவதற்காக இந்த பணிகள் நடைபெறுகிறது. திரும்ப பெறப்படும் படிவங்கள் அன்றைய தினமே ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் வாக்குச்சாவடிகளில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களின் பொதுமக்கள் ஆர்வத்துடன் கணக்கிட்டு படிவங்களை திரும்ப ஒப்படைத்தனர். இதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து வரும் 22, 23ஆம் தேதிகளில், (சனி, ஞாயிற்றுக்கிழமை) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிகப்பு முகாம் நடைபெறுகிறது.

எஸ்ஐஆர் திருத்த முகாம்

காலை 8 மணி முதல் 5 மணி வரை இந்த முகாமில் வாக்காளர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம். இதில் பழைய வாக்காளர் பட்டியலும் இருக்கும் என்பதால் பெற்றோர் உறவினர் ஆகியோரது விவரங்களை பூர்த்தி செய்து வழங்க ஏதுவாக இருக்கும். மேலும் படிவங்களை பூர்த்தி செய்வதில் சந்தேகம் ஏற்பட்டால் இந்த முகாமிலேயே சரி செய்து கொள்ளலாம். இதற்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் தன்னார்வளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுவரை கணக்கிட்டு படிவத்தை திரும்ப செலுத்தாத வாக்காளர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு படிவங்களை வழங்கலாம் என்கின்றனர் தேர்தல் அதிகாரிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+