அரைநிர்வாணமாக்கி! சிறைக்கு போனது இதுக்குதானா? ஜெயக்குமார் "மோதிய" வார்டில் என்ன ரிசல்ட்? ட்விஸ்ட்
சென்னை: சென்னையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக நிர்வாகி ஒருவரை தாக்கியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வார்டுக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் கடந்த சனிக்கிழமை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. முதல்கட்ட டிரெண்டுகளை பார்க்கும் போது திமுக இமாலய வெற்றியை இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி 21 மாநகராட்சிகளில் 20ல் திமுகதான் முன்னிலை வகிக்கிறது. சிவகாசியில் மட்டும் அதிமுக 8 வார்டுகளிலும், திமுக 6 வார்டுகளிலும் முன்னிலை வகிக்கிறது.

ஜெயக்குமார்
இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட 49-வது வார்டு பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் திமுக நிர்வாகி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இங்கு திமுகவினர் கள்ள ஓட்டு போட முயன்றதாக ஆபீசர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டி இருந்தார். இதையடுத்து சஞ்சீவிராயன் கோவில் தெருவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேராக சென்று சோதனைகளை செய்தார்.

49வது வார்டு
இது 49வது வார்டுக்கு கீழ் வரும் பகுதியாகும். அங்கு காமராஜர் மெட்ரிக்குலேசன் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் இருந்த திமுக நிர்வாகி ஒருவரை அமைச்சர் ஜெயக்குமார் ஆட்கள் தாக்கினர். அவர் கள்ள ஓட்டு வந்து போட வந்த போது அவரை கையும் களவுமாக பிடித்து தாக்கியதாக ஜெயக்குமார் தரப்பு கூறியது. திமுக நிர்வாகி என்று கருதப்படும் அந்த நபரை ஜெயக்குமார் ஆட்கள் மேலாடை இன்றி அடித்து, அழைத்து வந்தனர். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி உள்ளது.

நீதிமன்ற காவல்
இந்த சம்பவம் தொடர்பாக ஜெயக்குமார் மீது திமுகவை சேர்ந்த ரமேஷ் என்பவர் புகார் கொடுத்தார். இதில் ஜெயக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது 10 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் நேற்று இரவு ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். இவர் தற்போது 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவரின் பெயில் மனு நாளை எழும்பூர் மேஜிஸ்டிரேட் முன் விசாரணைக்கு வர உள்ளது.

சர்ச்சை
இவ்வளவு சர்ச்சைக்கும், முன்னாள் அமைச்சரின் கைதுக்கும் வித்திட்ட இந்த 49வது வார்டில் இன்று காலையில் இருந்து திமுகதான் முன்னிலை வகித்தது. இந்த நிலையில் தற்போது இங்கு திமுக வேட்பாளர் இளைய அருணா வெற்றி பெற்றுள்ளார். இவர் சென்னை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆவார். இவருக்கு எதிராக அங்கு ஜெயக்குமாருக்கு நெருக்கமான நிர்வாகிகள் பலர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தனர். இப்படிப்பட்ட நிலையில்தான் பல பிரச்சனைகளுக்கு இடையே இங்கு திமுக வேட்பாளர் இளைய அருணா வெற்றி பெற்றுள்ளார்.
-
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications