தொடர்ந்து 2-வது நாளாக.. தினசரி பாதிப்பில் தமிழகம் முதலிடம்.. சென்னை, கோவையில் தொற்று அதிகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் தொடர்ந்து 2-வது நாளாக கொரோனா தினசரி பாதிப்பில் நாட்டிலேயே முதலிடம் பிடித்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தினமும் அதிக பாதிப்பு, உயிரிழப்புகளை பதிவு செய்து வந்தது.

ஊரடங்கு போடப்பட்டதன் காரணமாக கொஞ்சம் குறைந்த பாதிப்பு நேற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தமிழகம் முதலிடம்

தமிழகம் முதலிடம்

கடந்த செவ்வாய்கிழமை நாட்டிலேயே அதிகபட்ச கொரோனா தினசரி பாதிப்பில் தமிழகம் முதலிடம் பிடித்ததது. தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் நாட்டிலேயே அதிகபட்ச தினசரி பாதிப்புகளை பதிவு செய்துள்ளது தமிழகம். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 34,875 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 365 பேர் உயிரிழந்தனர்.

மீண்டும் அதிகரிப்பு

மீண்டும் அதிகரிப்பு

தமிழகத்தில் மே 15-ம் தேதி 33,658 பாதிப்புகள் பதிவாகின. 16-ம் தேதி 33,181 பாதிப்புகளும், 17-ம் தேதி 33,075 பாதிப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் 33,059 பேருக்கு பாதிப்பு என்று தொற்று குறைந்து வந்தது. ஆனால் நேற்று 34,875 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது.

சென்னையில் அதிகம்

சென்னையில் அதிகம்

தமிழகத்தில் சிகிச்சை பெறுவார்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, 2,42,949 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. தலைநகர் சென்னையில் சில நாட்களாக குறைந்து வந்த பாதிப்பு நேற்று 6,297 பாதிப்புளுடன் மீண்டும் அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டும் காரணம்

செங்கல்பட்டும் காரணம்

காஞ்சீபுரத்தில் திங்களன்று ஒப்பிடும்போது தினசரி தொற்று எண்ணிக்கை (761) 38% ஆக குறைந்துள்ளது. ஆனால் உயிரிழப்பு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 19 ஆக அதிகரித்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள், திருவள்ளூரில்1,500-க்கும் அதிகமான பாதிப்புகள் தினமும் பதிவாகி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+