ஸ்டாலினின் ராஜதந்திரம்.. ஆளுநருக்கு வசமாக செக்! அதிமுகவும் அலற.. ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்த திமுக
சென்னை: ஆளுநர் ஆர். என் ரவிக்கு எதிரான வழக்கு மூலம் ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்து உள்ளது ஆளும் திமுக அரசு. சரியான நேரத்தில் வழக்கு பதிவு செய்து ஆளுநர் - அதிமுக இரண்டு தரப்பிற்கும் பிரஷர் ஏற்றி உள்ளது ஆளும் திமுக அரசு.
கடந்த 30ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்தது. சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது.நேற்று இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.

தமிழ்நாடு ஆளுநர் செயலற்றவராக இருக்கிறார், ஆளுநர் ரவியின் செயல்பாட்டால் பெரும் அரசியலமைப்பு சிக்கல் ஏற்பட்டுவிட்டது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவில் குற்றஞ்சாட்டி உள்ளது. அதில், ஆளுநர் ரவி அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார். ஆளுநர் ரவி மக்கள் தீர்ப்பை விளையாட்டு பொருளாக நினைத்து செயல்படுகிறார்.
தமிழ்நாடு மக்களின் உரிமைகளை தமிழ்நாடு ஆளுநர் பறிக்கிறார். மக்கள் தேர்வு செய்த அரசை செயல்பட விடாமல் தடுக்கிறார். முன்னாள் அமைச்சர்கள் ஊழல் விவகாரங்களில் விசாரணையை தொடர்வதில் குறுக்கே நிற்கிறார், என்று வழக்கில் தமிழ்நாடு அரசு கூறியது.
உச்ச நீதிமன்றம் என்ன சொன்னது?: இந்த வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கடுமையான கண்டனங்களை ஆளுநர் ரவிக்கு எதிராக வைத்தார். அதில், தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும் நிறைவேற்றிய 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிலுவையில் வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.
காரணம் ஏதும் கூறாமல் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை, மீண்டும் பேரவை நிறைவேற்றி அனுப்பியதால் அவற்றுக்கு ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும். காரணம் ஏதும் கூறாததால், மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கும் ஆளுநரால் அனுப்பி வைக்க முடியாது.
காரணத்தோடு மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பி இருந்தால் மட்டுமே, மீண்டும் திருப்பி அனுப்பும்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும். 3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார். நவம்பர் 10-ந் தேதி உத்தரவிட்ட பின்னர் நவம்பர் 13-ந் தேதி மசோதாக்களை திருப்பி அனுப்பி இருக்கிறாரே என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
விசாரணைக்கு அனுமதி: உச்சநீதிமன்றத்தின் தற்போதைய கருத்தால், தமிழ்நாடு அரசு மீண்டும் நிறைவேற்றி அனுப்பியுள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் தர வேண்டிய நிலைக்கு ஆளுநர் தள்ளப்பட்டுள்ளார். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான குட்கா முறைகேடு வழக்கில் குற்ற நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.
மற்ற விசாரணைகளுக்கு விரைவில் ஒப்புதல் வழங்குவோம் என்றும் கூறியுள்ளார். இவை ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக விளக்கம் அளித்துள்ளார்.
ஒரே கல்லில் 2 மாங்காய்: ஆளுநர் ஆர். என் ரவிக்கு எதிரான வழக்கு மூலம் ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்து உள்ளது ஆளும் திமுக அரசு. சரியான நேரத்தில் வழக்கு பதிவு செய்து ஆளுநர் - அதிமுக இரண்டு தரப்பிற்கும் பிரஷர் ஏற்றி உள்ளது ஆளும் திமுக அரசு.
அதன்படி ஒரு பக்கம் ஆளுநருக்கு வசமாக செக் வைக்கப்பட்டு உள்ளது. இன்னொரு பக்கம் அதிமுகவிற்கு திமுக தரப்பு செக் வைத்து உள்ளது. மாஜி அமைச்சர்கள் மீதான வழக்குகளை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளுநர் ரவி தள்ளப்பட்டு உள்ளார். இதனால் அதிமுகவும் சிக்கலுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications