“இதுதான் ட்விஸ்ட்..” தமிழக அரசுக்கு ஆஹா ஓஹோ பாராட்டு தெரிவித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "இந்திய பொருளாதார வளர்ச்சியில், தமிழ்நாடு முக்கிய பங்கு வகித்து வருகிறது" என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியுள்ளார். அண்மையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்த கருத்துகள் தமிழ்நாட்டில் அனலைக் கிளப்பி இருந்த நிலையில், தற்போது தமிழ்நாடு பற்றி பாராட்டிப் பேசியுள்ளார்.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), 'இன்வென்டிவ் 2025' (IInvenTiv 2025) கண்காட்சியை இன்றும் நாளையும் நடத்துகிறது. இதில், ஐஐடி-க்கள், என்ஐடி-க்கள், ஐஐஎஸ்இஆர்-கள் மற்றும் என்ஐஆர்எப் தரவரிசையில் இடம்பெற்ற 50 முதன்மைக் கல்வி நிறுவனங்களின் புத்தம் புது கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

Chennai Dharmendra pradhan tamil nadu

இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தக் கண்காட்சியை, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேரில் பங்கேற்று தொடங்கி வைப்பார் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திடீரென மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டது.

தமிழகத்திற்கு கல்விக்கான நிதி வழங்க மறுத்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், சென்னைக்கு வந்தால் அவருக்கு கடும் எதிர்ப்பு ஏற்படும் என்பதால் தான் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் நேரடியாக பங்கேற்றுள்ளார். அதேசமயம், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த நிகழ்வில் காணொளிக் காட்சி வாயிலாகப் பேசியுள்ளார்.

இன்று சென்னை ஐஐடியில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், 'வணக்கம்' என்று தமிழில் தனது பேச்சை தொடங்கினார் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.தொடர்ந்து பேசிய அவர், "இந்திய பொருளாதார வளர்ச்சியில், தமிழ்நாடு முக்கிய பங்கு வகித்து வருகிறது" என தமிழ்நாட்டுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுக்கிறது என்றும், அதனால் தமிழகத்திற்கு கல்விக்கான நிதி வழங்க முடியாது என்றும் கூறியிருந்தார். தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்றால் மட்டுமே ரூ.2152 கோடி கல்வி நிதியை விடுவிப்போம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, மத்திய கல்வி அமைச்சருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். திமுக உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களில் இறங்கியுள்ளன. திமுக மாணவர் அணி சார்பிலும், மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்தச் சூழலில் தான் தர்மேந்திர பிரதான் இவ்வாறு பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+