நாளை முதல் இ பாஸ் கட்டாயம்.. பறந்த உத்தரவு.. தீயாய் மாறிய அதிகாரிகள்.. இனி வாய்ப்பேயில்லை!
சென்னை: வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வர நாளை முதல் இ-பதிவு எனப்படும் இ பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால் மாநில எல்லைகளில் மீண்டும் தீவிர சோதனை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இனி இபாஸ் இல்லாமல் தமிழகம் வருவது சாத்தியமில்லை என்கிறார்கள் அதிகாரிகள்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. இதன்படி வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு நாளை முதல் இ-பதிவு கட்டாயம் ஆகும்..
இங்கிலாந்தில் கொரோனா பரவ தொடங்கியதில் இருந்தே வெளிநாடுகளில் இருந்து வருவோர் தீவிர கண்காணிப்புக்கு பிறகே சொந்த ஊர் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்

கண்காணிப்பு
ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் எந்த கண்காணிப்பும் இன்றி அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். மற்ற மாநிலங்களைப் போல் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்கள் கேட்கப்பட்வில்லை. ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவது நாளை முதல் பழையபடி கடுமையாக்கப்படுகிறது.

வெளிமாநிலங்கள்
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வர இனி கட்டாயம் இ-பதிவு காட்டாயம் செய்ய வேண்டும். அலுவலகப் பணி, தொழில், மருத்துவம் உள்ளிட்ட காரணங்களை கூறினாலும் இ-பாஸ் இல்லாவிட்டால் அனுமதிக்க வேண்டாம் என்று அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
எனவே நாளை முதல். இ பதிவு இல்லாமல் வருபவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்ப வாய்ப்பு உள்ளதாம்.

முககவசம் கட்டாயம்
கொரோனா கட்டுப்பாடுகளை போலீஸாரும் தீவிரமாக கடைபிடிக்குமாறு காவல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதன் காரணமாக சாலைகளில் இனி முகக் கவசம் இல்லாமல் வாகனம் வருபவர்களுக்கு ரூ.200அபராதம் வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணிவதும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.அத்துடன் இனி காவல்நிலையங்களில் முககவசம் அணியாமல் சென்றால் புகார்கள் வாங்கப்படாது.

அதிகாரிகள் அதிரடி
காவல்நிலையம் மட்டுமல்ல, கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் என எங்கு சென்றாலும் முககவசம் கட்டாயம் ஆகும். முககவசம் இல்லாவிட்டால் அனுமதிக்க கூடாது. தொழில் நிறுனங்களும் முககவசம் அணியாமல் யாரையும் வேலை செய்ய அனுமதிக்கக்கூடாது. இந்த உத்தரவுகளை கடைபிடிக்க வைக்க அதிகாரிகள் குழு அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் தீவிர ஆய்வு செய்ய உள்ளது.












Click it and Unblock the Notifications