Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டிற்கு பெண்டிங் இருக்கும் ரயில் திட்டங்கள்.. இந்த பட்ஜெட்டிலாவது நிதி ஒதுக்கப்படுமா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் கூட்டத்தொடரில், தமிழ்நாட்டுக்கான ரயில்வே திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றனவா? என்கிற எதிர்பார்ப்பு எழும். அந்த வகையில், இந்த ஆண்டும், எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இதற்கான நிதி இந்த பட்ஜெட்டிலாவது ஒதுக்கப்படுமா என்பதற்கு நாளை பதில் தெரிந்துவிடும்.

தமிழ்நாட்டிற்கு தற்போது 5 புதிய திட்டங்களுக்கு நிதி தேவைப்படுகிறது. மொத்தம் ரூ.33,000 கோடி நிதி தேவைப்படுகிறது. மொத்தமாக ஒரே பட்ஜெட்டில் இவ்வளவு தொகையை ஒதுக்க முடியாது என்றாலும், இதில் பாதியை ஒதுக்கினாலும் இந்த பணிகள் வேகமெடுக்க தொடங்கிவிடும்.

Tamil Nadu Railway Projects
  • மதுரை - அருப்புக்கோட்டை- தூத்துக்குடி புதிய பாதை
  • ஈரோடு - பழனி புதிய ரயில் பாதை
  • சென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரி
  • திண்டிவனம் - திருவண்ணாமலை
  • பழனி - சாம்ராஜ்நகர்

மதுரை - அருப்புக்கோட்டை- தூத்துக்குடி புதிய பாதை

சுமார் 143 கி.மீ நீளம் கொண்ட, மதுரை - அருப்புக்கோட்டை- தூத்துக்குடி புதிய பாதை திட்டம் தென் மாவட்ட மக்களின் நீண்ட கால கனவாகும். மதுரையிலிருந்து தூத்துக்குடி போக வேண்டும் எனில், விருதுநகர், கோவில்பட்டி வழியாகச் சுற்றியே செல்ல வேண்டும். ஆனால், இந்த புதிய பாதை அமைந்தால் அருப்புக்கோட்டை, எட்டயபுரம் வழியாக எளிதாக சென்றுவிடலாம். பழையை ரூட்டை விட இது 20-30 கி.மீ தூரம் குறைவு. பயண நேரமும் குறையும். குறிப்பாக மதுரை-தூத்துக்குடி தொழில்துறை காரிடார் வளர்ச்சிக்கு இந்த ரூட் அதிக அளவில் பயன்படும்.

சாவல்கள் என்ன?

அதேபோல, இதுவரை ரயில் வசதி இல்லாத அருப்புக்கோட்டை, விளாத்திகுளம், எட்டயபுரம் போன்ற பகுதிகளில் ரயில் நிலையம் அமையும். தற்போது இந்த திட்டத்தில், மதுரை அருப்புக்கோட்டை இடையே நிலம் கையகப்படுத்தும் பணிகள் ஓரளவுக்கு முடிந்திருக்கிறது. மறுபுறம், அருப்புக்கோட்டை- தூத்துக்குடி நிலம் கையகப்படுத்துவதில் சவால்கள் இருக்கின்றன. குறிப்பாக விளாத்திகுளம் பகுதியில் நிலம் பெறுவதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.

ஒவ்வொரு பட்ஜெட்டிலும், இந்த திட்டத்திற்கு டோக்கன் தொகையாக குறைந்த அளவே நிதி ஒதுக்கப்படுவதால் பணிகள் மெதுவாக நடைபெறுகின்றன.

ஈரோடு - பழனி புதிய ரயில் பாதை

இத்திட்டத்தை பொருத்தவரை, சுமார் 91 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும். இது 70 ஆண்டு கோரிக்கையாக இருக்கிறது. இந்த பாதை, ஈரோட்டில் தொடங்கி முத்து நகர்-வெள்ளக்கோயில்-தாராபுரம் வழியாக பழனியை அடையும். தற்போதைய நிலையில், ஈரோட்டில் இருந்து பழனி போகவேண்டும் எனில், கரூர் அல்லது கோயம்புத்தூர் வழியாக சுற்றி தான் போக வேண்டும். எனவே, இந்த புதிய பாதை அமைந்தால் பயண தூரம் மற்றும் நேரம் குறையும்.

சிக்கல் என்ன?

இந்த திட்டம் முதல் முதலில், ஆங்கிலேயர்களால் ஆலோசிக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு பின், பலமுறை சர்வே எடுக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை. கடந்த காலங்களில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டாலும், தாராபுரம் மற்றும் வெள்ளக்கோயில் பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் திட்டத்தின் வருவாய் ஈட்டும் திறன் குறைவாக இருப்பதாக கூறி ரயில்வே அமைச்சகம் திட்டத்தை கிடப்பில் போட்டிருந்தது.

ஒவ்வொரு ஆண்டும் திட்டுதற்காக மக்கள் போராடினாலும், பட்ஜெட்டில் வெரும் ஆயிரம் ரூபாய் மட்டுமே டோக்கன் நிதியாக பலமுறை ஒதுக்கப்பட்டிருந்தது. திட்டத்தை நிறைவேற்ற ரூ.1,500 கோடி முதல் 2,000 கோடி வரை தேவைப்படலாம்.

சென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரி

சென்னை-மாமல்லபுரம்-புதுச்சேரி ரயில் பாதை திட்டம் என்பது, தமிழகத்தின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகும். சுமார் 179 கிலோமீட்டர் நீளம் கொண்ட, இந்த திட்டத்தின் தொடக்கம், பெருங்குடியில் இருந்து ஆரம்பிக்கிறது. பெருங்குடியில் தொடங்கி, மகாபலிபுரம், கல்பாக்கம், செய்யூர், மரக்காணம் என இறுதியாக புதுச்சேரியில் ரயில் பாதை நிறைவடைகிறது.

ஏன் முக்கியம்?

உலக புகழ்பெற்ற மகாபலிபுரம் மற்றும் சுற்றுலா நகரமான புதுச்சேரியை இணைப்பதால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். தற்போது, சென்னையில் இருந்து புதுச்சேரி செல்ல இசிஆர் சாலையே பிரதானமாக உள்ளது. இந்த ரயில் பாதை அமைந்தால் சாலையில் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் குறையும்.

நிலுவையில் திட்டம்

இந்த திட்டம் 2008-2009ம் ஆண்டு பட்ஜெட்டிலே அங்கீகரிக்கப்பட்டது. இருப்பினும் 15 ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. குறிப்பாக நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதம் காரணமாக, திட்டம் தள்ளிப் போயிருக்கிறது. கடற்கரை ஓரமாக நிலம் கையகப்படுத்துவதில் பெரும் சிக்கல் உள்ளது. நிலத்தின் மதிப்பு மிக அதிகம் என்பதால் இழப்பீடு வழங்குவதிலும் சிக்கல் நீடிக்கிறது.

திண்டிவனம் - திருவண்ணாமலை

திண்டிவனம்-திருவண்ணாமலை புதிய ரயில் பாதை 70 கிலோமீட்டர் நீளம் கொண்ட திட்டமாகும். இந்த திட்டம் வட தமிழகத்தில் இரண்டு முக்கிய நகரங்களை இணைப்பது மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தென்னக ரயில்வே வரைபடத்தில் ஒரு முக்கியமான இணைப்பாக கருதப்படுகிறது.

உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு, இது மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும். குறிப்பாக சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் இருந்து வரும் பக்தர்கள் எளிதாக கோயிலை அடைய இந்த புதிய ரயில் பாதை உதவும். திண்டிவனம் மற்றும் திருவண்ணாமலைக்கு இடைப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாய விளை பொருட்கள் மற்றும் சிறு தொழில்கள் மேம்படவும் இந்த திட்டம் உதவும்.

சிக்கல் என்ன?

கடந்த 2007-2008 பட்ஜெட்டில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் 18 ஆண்டுகளாகியும் இன்னும் திட்டம் முழுமை பெறவில்லை. தொடக்க காலங்களில் நிதி மிக குறைவாக ஒதுக்கப்பட்டது. எனவே பல ஆண்டுகளாக பணிகள் மெதுவாக நடைபெற்றன. நிலம் கையகப்படுத்துதல் விஷயத்தில் சுமார் 400 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த வேண்டி இருக்கிறது.

பழனி - சாம்ராஜ்நகர்

பழனி-சாம்ராஜ்நகர் புதிய ரயில் பாதை திட்டம் தமிழக மற்றும் கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் மிக முக்கியமான, அதே சமயம் கடினமான ரயில்வே திட்டங்களில் ஒன்றாகும். இதன் நிலம் 120 கிலோமீட்டர்.

இந்தப் பாதை, பழனியில் தொடங்கி தாராபுரம்-காங்கேயம்-ஈரோடு-சத்தியமங்கலம் வழியாக கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ்நகரை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டது. இந்த திட்டம் பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தாலும் இந்த ரயில் பாதை தாளவாடி மற்றும் சத்தியமங்கலம் காப்பு காடுகள் வழியாக செல்ல வேண்டும் என்பதால் வனவிலங்குகள், குறிப்பாக யானைகள் பாதிக்கப்படும். எனவே சுற்றுச்சூழல் அமைச்சகம் இதற்கு அனுமதி வழங்க மறுத்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+