பள்ளிகளில் அதிகரிக்கும் பாலியல் தொல்லை! புலம்பி தவிக்கும் பெற்றோர்..கண்சிவந்த முதல்வர்! பறந்த ஆர்டர்
சென்னை: தமிழக கல்விக் கூடங்களில் மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தரும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிக் கல்வித்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மாணவ, மாணவியர் புகார் தெரிவிக்க பாடநூல்களின் பின்புற அட்டைகளில் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் இருக்க வேண்டுமெனவும், மாணவ மாணவியர்களிடம் ஒழுங்கீனமாக நடப்பவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சார்ந்து பள்ளி நிர்வாகி மற்றும் பள்ளி முதல்வர் மீது காவல் துறையால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட 2 பள்ளிகளுக்கு அரசால் சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டு பள்ளி நிர்வாகம் சிறப்பு அதிகாரிகளின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் காரணமாக பள்ளி நிர்வாகி, முதல்வர் மற்றும் சார்ந்த ஆசிரியர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பள்ளி மாணவ/மாணவிகளுக்கு எதிரான செயல்பாடுகளை தடுக்கும் பொருட்டு ஒவ்வொரு பாடப்புத்தகத்தின் பின்பக்க அட்டையில் 14417, 1098 போன்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டு, பாலியல் துன்புறுத்தல் சார்ந்த விவரங்களை புகார் அளிக்க மாணவ/மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ/ மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக் குழு SSAC Student safeguarding advisory committee குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் மாதம் ஒருமுறை இக்குழு கூடி மாணவிகளுக்கெதிரான புகார் ஏதும் பெறப்படின் அதுசார்ந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு பள்ளியிலும் "மாணவர் மனசு" என்ற புகார்ப் பெட்டி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள SSAC குழு உறுப்பினர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வாயிலாக பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிகளிலிருந்து மாணவ/மாணவியர்களை NSS, NCC, Scout & Guide, JRC போன்ற அமைப்புகளின் செயல்பாடுகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் காரணமாக பள்ளியை விட்டு வெளியே மாவட்ட அளவிலோ அல்லது மாநில அளவிலோ அழைத்துச் செல்ல நேரிடும்பொழுது ஒவ்வொரு மாணவ, மாணவியரின் பெற்றோரிடமும் தனித்தனியாக எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்று அதன் பிறகு மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்டக் கல்வி அலுவலரின் முன் அனுமதியின்றி மாணவ, மாணவியரை பள்ளியைவிட்டு வெளியே அழைத்துச் செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாணவ/மாணவியரை வெளியே அழைத்துச் செல்லும் பொழுது 10 மாணவர்களுக்கு ஒரு ஆண் ஆசிரியர் எனவும் 10 மாணவிகளுக்கு ஒரு பெண் ஆசிரியை எனவும் உடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் மாணவர்/ மாணவியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர்கள். ஆசிரியைகள் உடன் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டக்கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறையைச் சார்ந்த இயக்குநர்கள்/இணை இயக்குநர்கள் மாவட்டங்களுக்கு ஆய்வுக்கு செல்லும் பொழுது மேற்கண்ட பணிகளை கண்காணித்து தொடர் நடவடிக்கைகள் எடுக்க அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிக் குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவியர்களிடம் ஒழுக்கக்கேடான முறையில் நடந்து கொள்பவர்கள் மீது காவல் துறை வாயிலாக குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன் துறைரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது." என கூறப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications