சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் 9,11ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் - அரசு வழிகாட்டு நெறிமுறை

பள்ளி, விடுதிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் 10 மாதங்களுக்குப் பின் ஜனவரி 19ஆம் தேதி திறக்கப்பட்டன. பத்து மற்றும் 12 இதனை தொடர்ந்து 9,11ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளும் விடுதிகளும் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, விடுதிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதம் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கவும் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் பள்ளி, விடுதிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tamil Nadu Schools open Feb 8th for 9th and 11th grades Government guidelines

இட நெருக்கடியை தவிர்க்க காலை, பிற்பகல் என வகுப்புகளை பிரித்து நடத்தவும், மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் வகுப்புகளை ஒருநாள் விட்டு ஒருநாள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகள் ஒருநாள் விட்டு ஒருநாள் அல்லது ஷிப்ட் முறையில் அல்லது சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தொற்று அபாயம் இருக்காது எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Government of Tamil Nadu has issued guidelines for opening schools and hostels. In it, the school education department has been ordered to conduct classes in rotation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X