சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் வீரியமடையும் கொரோனா: ஒரே நாளில் 5441 பேர் பாதிப்பு - 23 பேர் மரணம்

தமிழகத்தில் மேலும் 5,441 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 9,20,827 ஆக அதிகரித்துள்ளது. 23 பேர் இன்று கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,441 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9,20,827 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 1,890 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,74,305 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக வீசத் தொடங்கியுள்ளது. 1,31,03,572 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,19,23,208 பேர் குணமடைந்துள்ளனர். 10,12,503 பேர் நாடு முழுவதும் சிகிச்சையில் உள்ளனர். இன்று ஒரே நாளில் 167,861 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Tamil Nadu sees over 5441coronavirus cases; reports 23 deaths

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் மேலும் 5,441 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 9,20,827 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 1,890 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,74,305 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,863 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 14 பேரும் தனியார் மருத்துவமனையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 2,03,47,042 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 88,135 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 33,659 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த 28 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இன்று தமிழகம் வந்தவர்களில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை வீரியம்... தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலாகுமா? - முதல்வர் பழனிச்சாமி சொல்வதென்னகொரோனா இரண்டாவது அலை வீரியம்... தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலாகுமா? - முதல்வர் பழனிச்சாமி சொல்வதென்ன

சென்னையில் இன்று ஒரே நாளில் 1752 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,61,072பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் 473 பேருக்கும், செங்கல்பட்டில் 465 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

திருச்சியில் 243 பேருக்கும் தஞ்சையில் 144 பேருக்கும் மதுரையில் 142 பேருக்கும் நாகப்பட்டினத்தில் 126 பேருக்கும் புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது. திருவள்ளூரில் 195 பேரும், திருப்பூரில் 148 பேரும், திருநெல்வேலியில் 114 பேரும் வேலூரில் 109 பேரும் கொரோனா தொற்றினால் இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

English summary
A further 5,441 people in Tamil Nadu were confirmed to be infected with corona today. This brings the number of corona victims to 9,20,827. Another 1,890 people have recovered from Corona in Tamil Nadu. A total of 8,74,305 have recovered and returned home.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X