விஜய் கையில் பிரம்மாஸ்திரம்.. இது நடந்தால் தமிழக மருத்துவத்துறையில் பெரும் புரட்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மருத்துவத் துறையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையிலும், தொழில் தொடங்குவதை எளிதாக்கும் நோக்கத்தோடும், மருத்துவமனைகளுக்கான ஒற்றைச் சாளர அனுமதி முறையை அறிமுகப்படுத்த தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்று இது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த பல ஆண்டுகளாக இழுபறியில் இருந்த இந்த திட்டம், விரைவில் அரசாணையாக வெளியாக உள்ளது.

tvk

இதன் மூலம் புதிய மருத்துவமனைகளைக் கட்டுவதற்கும், மருத்துவ நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும் தேவையான அனைத்து அனுமதிகளும் இனி மிகக் குறுகிய காலத்தில் ஒரே இடத்தில் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

காத்திருப்புக்குக் கிடைத்த விடிவுகாலம்

மருத்துவச் சேவைகளில் இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழும் தமிழ்நாட்டில், புதிய மருத்துவமனைகளைத் தொடங்குவதற்கான கட்டிட அனுமதி, சுற்றுச்சூழல் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அனுமதிகளைப் பெறுவதில் பல ஆண்டுகளாக கடும் சிரமங்கள் நீடித்து வந்தன.

மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்கள் ஏற்கனவே இத்தகைய ஒற்றைச் சாளர முறையைச் செயல்படுத்தி வரும் நிலையில், தமிழகத்திலும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் எனப் பல முன்னணி அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன.

குறிப்பாக, இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (CII) மற்றும் இந்திய மருத்துவமனை நிர்வாகிகள் சங்கம் (AHPI) ஆகியவற்றின் பிரதிநிதிகள், முதல்வர் மற்றும் சுகாதாரத் துறைச் செயலாளருடன் தொடர் பேச்சுவார்த்த நடத்தி இத்திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தினர்.

லஞ்ச ஒழிப்பு

தற்போதுள்ள சிக்கலான நடைமுறைகளால், வரைபட ஒப்புதலுக்குப் பின் தேவையற்ற காலதாமதங்கள் ஏற்படுவதோடு, லஞ்ச முறைகேடுகளும் நிலவி வந்ததாக தொழில்துறை வட்டாரங்கள் குற்றம்சாட்டுகின்றன. ஒரு புதிய திட்டத்திற்கு அனுமதி பெற மட்டுமே ₹40 லட்சம் முதல் ₹50 லட்சம் வரை கூடுதலாக விரையமாகும் சூழல் இருந்தது.

வெளிப்படையான கட்டண முறை

தற்போது அறிமுகமாகவுள்ள புதிய கட்டமைப்பு, வெளிப்படையான கட்டண முறையைக் கொண்டு வருவதால் இத்தகைய முறைகேடுகள் முற்றிலும் தவிர்க்கப்படும். இதனால் மருத்துவர்கள் மற்றும் புதிய முதலீட்டாளர்கள் தேவையற்ற இழுபறிகளின்றி, வெளிப்படையான முறையில் அனுமதிகளைப் பெற முடியும்.

இனி ஒரு மருத்துவமனை கட்ட கோரிக்கை வைத்து முறையான ஆவணங்களை வழங்கினால் போதும், லஞ்சம் எதுவும் கொடுக்காமலே மருத்துவமனைக்கான அனுமதிகளை பெற முடியும். இதனால் எளிதாக மருத்துவமனை கட்டுமானங்களை மேற்கொள்ள முடியும்.

பல ஆண்டுகள் கழித்து இனி சில மாதங்களில் அனுமதி

முன்பு பல ஆண்டுகள் நீடித்த ஒப்புதல் செயல்முறைகள், இந்த ஒற்றைச் சாளர அமைப்பின் மூலம் இனி வெறும் சில மாதங்களிலேயே முடிவடையும்.

தற்போது வரை தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்ட 7 முதல் 8 பெரிய மருத்துவமனைத் திட்டங்கள் முறையான அனுமதியின்றி முடங்கிக் கிடக்கின்றன. இந்த புதிய அரசாணை வெளியானவுடன், முடங்கியுள்ள அனைத்துத் திட்டங்களும் விரைவாகப் புத்துயிர் பெறும்.

MSME தளத்தில் ஒருங்கிணைப்பு

இன்று நடைபெறவுள்ள சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை ஆய்வுக்கூட்டத்திற்குப் பிறகு, முதலமைச்சரின் ஒப்புதலோடு இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிரடி மாற்றத்தால் தமிழகத்திற்குப் புதிய மருத்துவ முதலீடுகள் பெருமளவில் ஈர்க்கப்பட்டு, மருத்துவத் துறை புதிய உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+