அரசியல் சாணக்கியனாக ஆசைப்படும் ரஜினிகாந்த்தை, அம்பலப்படுத்திய ஏர்போர்ட் பிரஸ்மீட்
சென்னை: தமிழ்நாடு அரசியல் களத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்பட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய பேச்சு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இத்தனைக்கும் அரசியலுக்கே வரமாட்டேன் என தப்பி ஓடிய நிலையிலும் ரஜினிகாந்தின் நடவடிக்கைகளும் பேட்டிகளும் அவ்வப்போது சர்ச்சைகளையும் பஞ்சாயத்துகளையும் கிளப்பிக் கொண்டுதான் இருக்கிறது.
எம்ஜிஆர் கோலோச்சிய காலம் முதலே ரஜினிகாந்த் அரசியல் வருகையை சில சக்திகள் விரும்பிக் கொண்டிருந்தன. ஆனால் இதற்கு ரஜினிகாந்த் பிடி கொடுக்காமல் இருந்தார். ஜெயலலிதாவின் ஆட்சியில் பகிரங்கமாக அரசியல் பேசிய ரஜினிகாந்த், கருணாநிதி- மூப்பனாருடன் கை கோர்த்தார். 1996-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கருணாநிதி- மூப்பனார்- ரஜினிகாந்த் கூட்டணி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. அதேநேரத்தில் இயல்பாக இருந்த ஜெயலலிதா ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பால்தான் இந்த அணி வென்றது; காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதையாக ரஜினிக்கும் மகுடம் கிடைத்துவிட்டது என்கிற கருத்தும் எப்போதும் உண்டு.

அதிகார போதையில் ரஜினிகாந்த்: ஏனெனில் 1996 தேர்தலுக்குப் பிறகு ரஜினிகாந்த் மேற்கொண்ட எந்த ஒரு தேர்தல் நிலைப்பாடும் கை கொடுக்கவில்லை. பாபா படவிவகாரத்தின் போது நடைபெற்ற தேர்தலில் ரஜினிகாந்த் எடுத்த பாமக எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு துளி கூட ஆதரவு கிடைக்கவில்லை என்பது தமிழகம் அறிந்ததுதான். பின்னர் ஆளும் கட்சி- முதல்வர்களை அனுசரித்து போவதை வழக்கமான பாணியாக மாற்றிக் கொண்டார் ரஜினிகாந்த். எந்த ஜெயலலிதாவை கடுமையாக எதிர்த்தாரோ அதே ஜெயலலிதாவை ஆதரிக்கவும் செய்தார் ரஜினி. ஒரு கட்டத்தில் ஜெயலலிதா, கருணாநிதி என ஆளுமைகள் மறைந்துவிட ரஜினிக்குள் இருந்த 'அரசியல் அதிகார' போதை வெளிப்பட்டது.
அரசியலை விட்டு ஓடிப் போன ரஜினிகாந்த்: தமிழ்நாட்டில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது; எம்ஜிஆர் போல ஆட்சி தரப் போகிறேன்; அரசியல் கட்சியை தொடங்கப் போகிறேன் என ரஜினி எழுப்பிய பெருங்குரல் இந்தியா முழுவதும் கவனம் பெற்றது. ஆனால் தமிழ்நாட்டின் அரசியல் பிரச்சனைகளில் ரஜினிகாந்த் முன்வைத்த கருத்துகள் சகட்டுமேனிக்கு வசைகளை வாரிக் கட்டிக் கொண்டது. அந்தளவுக்குதான் ரஜினிக்கான அரசியல் பாடம் இருந்தது. இதோ.. அதோ என்றெல்லாம் கூவியபடியே கட்சி தொடங்க தயாரான ரஜினிகாந்துக்கு எங்கிருந்தோ கிடைத்த ஞானத்தால், அரசியல் களமே வேண்டாம் என கும்பிடுபோட்டுவிட்டு ஓடிப் போய்விட்டார்.
அரசியல் சாணக்கியராம்.. : ஆனாலும் ரஜினிக்குள் இருக்கிற அரசியல் ஆசைகளை அவ்வப்போது சில சக்திகள் தூண்டிவிட்டுக் கொண்டிருப்பதால் அரசியலுக்கே வராமல் 'அரசியல் சாணக்கியராக' நினைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குப் போய்விட்டார் ரஜினிகாந்த். அரசியல்வாதிகள் நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால் ஓடிப் போய் நாலு கருத்துகளைப் பேசிவிட்டு அரசியல் சாணக்கியர் நான் என்கிற ரேஞ்சில் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்வதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார் ரஜினிகாந்த். இந்த வகையில்தான் அண்மையில் நாம்தமிழர் இயக்குநர் சீமானின் சந்திப்பும் ஊதிப் பெரிதாக்கப்பட்டது. நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் விழுந்த அடியை சமாளிக்க முடியாமல் ரஜினிகாந்திடம் ஓடிப் போய் சரணாகதி அடைந்தார் சீமான். இதனை மூடி மறைக்க ரஜினிகாந்துக்கு 'அரசியல் சாணக்கியர்' வேஷம் கட்டிவிடப்பட்டது.
திருவண்ணாமலை துயரம்: தமிழ்நாட்டு அரசியலுக்கும் ரஜினிகாந்துக்கும் எள்முனையளவும் தொடர்பே இல்லை என்பதுதான் யதார்த்தம். இதனை நாம் சொல்லவில்லை. தமிழ்நாட்டையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய திருவண்ணாமலை நிலச்சரிவு தொடர்பான ரஜினிகாந்த் கருத்தே ஒப்புதல் வாக்குமூலமாக இருக்கிறது. திருவண்ணாமலையில் வரலாறு காணாத பெருமழை வெள்ளம் கொட்டித் தீர்த்து மலைச் சரிவு ஏற்பட்டு 7 பேர் பலியான நிலையில் தமிழகமே பெருந்துயரில் உறைந்து நிற்கிறது.
ஓ மைகாட் பதில் தந்த ரஜினிகாந்த்: இந்த துயரசம்பவம் குறித்து செய்தியாளர்கள் ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்ப அவர் தந்த பதில்தான் அனைவரையும் 'தலைசுற்ற வைத்துவிட்டது'.. ஆம் திருவண்ணாமலையிலா? ஓ மை காட் என்பதுதான் ரஜினிகாந்த் தந்த பதில். திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டு 10 நாட்களாகிவிட்ட நிலையிலும் அப்படி ஒரு சம்பவம் நடந்தது கூட ரஜினிகாந்துக்கு தெரியாமல் 'மாய உலகில்' சஞ்சரித்துக் கொண்டிருந்ததாகவே அவரது பதில் பார்க்கப்படுகிறது. இப்படியான யதார்த்த வாழ்வியலுக்கு நேர் எதிரான வாழ்க்கை வாழுகிற ரஜினிகாந்த், தமிழ்நாட்டின் அரசியல் சாணக்கியர் என ஒரு தரப்பு வலிந்து திணிப்பதை எப்படி சாமானிய தமிழ்நாட்டு வாக்காளனால் ஜீரணித்துக் கொள்ள முடியுமோ?
-
ஒரே ஒரு தோட்டா.. காட்டி விடுவேன் டாட்டா.. சமூக விரோதிகளுக்கு சீமான் வார்னிங் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications