தமிழகத்தில் நாளை முதல் 2 நாள் கடையடைப்பு.. வடமாவட்டங்கள் + தென்மாவட்ட மக்களே கவனம்!
சென்னை: தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் என மொத்தம் 2 நாட்கள் கடையடைப்பு நடத்தப்பட உள்ளது. வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வணிகர்கள் சங்கங்கள் வைத்து செயல்பட்டு வருகின்றனர். வணிகர்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது சங்கம் மூலம் அவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு தங்களின் உரிமைகளை கேட்டு பெறுகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை 2 முக்கியமான வணிகர் சங்கங்கள் உள்ளன. அதில் ஒன்று வணிகர் சங்க பேரவை. இன்னொன்று வணிகர் சங்க பேரமைப்பு.
இதில் வணிகர் சங்க பேரவையின் தலைவராக இருந்தவர் வெள்ளையன். அதேபோல் வணிகர் சங்க பேரமைப்பின் தலைவராக விக்கிரமராஜா செயல்பட்டு வருகிறார். வணிகர் சங்க பேரமைப்பு என்பது வணிகர் சங்க பேரவையில் இருந்து தான் உருவாக்கப்பட்டது. வெள்ளையன் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டி விக்கிரமராஜா தலைமையில் புதிய பேரமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் தான் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் தொற்று பிரச்சனை இருந்தது. இதையடுத்து அவர் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தான் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். வெள்ளையன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் மறைந்த வெள்ளையன் உடல் நாளை பெரம்பூரில் உள்ள வணிகர் சங்க பேரவையின் கட்டத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் வெள்ளையன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 நாட்கள் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் என்று 2 நாட்கள் தமிழகத்தில் கடையடைப்பு பேராட்டம் நடைபெற உள்ளது. அதன்படி நாளை வடமாவட்டங்களிலும், நாளை மறுநாள் தென்மாவட்டங்களிலும் கடையடைப்பு நடத்தப்பட உள்ளது. இந்த தினங்களில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையில் செயல்படும் கடைகள் அடைக்கப்பட உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை வணிகர் சங்க பேரவையின் பொதுச்செயலாளர் சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
-
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!












Click it and Unblock the Notifications