அடுத்தடுத்த 2 பெரிய அறிவிப்பு! மின்சார கட்டணத்தில் மாற்றம்? மக்கள் குஷியோ குஷி! தமிழ்நாடு அரசு ஆக்சன்
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக கடந்த வாரத்தில் 1 மேஜர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதேபோல் இன்னொரு மேஜர் அறிவிப்பு தொடர்பான அதிகாரபூர்வமற்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. முக்கியமாக அமைச்சர் தங்கம் தென்னரசு வந்த பின் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் கீழ்க்கண்ட 2 அறிவிப்புகள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

அறிவிப்பு 1: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் லண்டனில் இருந்து முக்கியமான டீம் ஒன்றை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். அவர்களுக்கு சிறப்பு ப்ரொஜெக்ட் ஒன்றும் கொடுக்கப்பட உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை மனதில் வைத்து முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை வகுத்து உள்ளார். அதன்படி லண்டனில் இருக்கும் பிரபல கன்சல்டன்சி நிறுவனமான Ernst & Young நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி Ernst & Young நிறுவனம் தமிழ்நாட்டில் இருக்கும் 50 பொதுத்துறை நிறுவனங்களை ஆய்வு செய்து வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களின் ஆண்டு/காலாண்டு அறிக்கைகள், நடப்பு வருமான குறிப்புகள், இடைக்கால பொருளாதார அறிக்கைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்திறன் போக்குகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய உள்ளனர். அந்த நிறுவனங்களின் பல்வேறு பொருளாதார அறிக்கைகளை வைத்து இந்த நிறுவனம் அவர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய உள்ளனர்.
நிதி அமைச்சகத்தின் பிரிவான பொது நிறுவனங்களின் பணியகம் என்ற பிரிவுடன் இவர்கள் இணைந்து செயல்பட உள்ளனர். இந்த நிறுவனம் சமீபத்தில் மின்சார வாரியத்தில் ஆய்வு செய்தது. இந்த ஆய்வு முடிவில் மின்சார வாரியம் தொடர்பாக முக்கியமான பரிந்துரைகளை அந்த நிறுவனம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
[பரிந்துரை: அதன்படி மின்சார வாரியமான Tangedco அமைப்பை 3 ஆக பிரிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அதாவது 3 நிறுவனங்களாக இதை மாற்ற பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மின்சார வாரியத்தின் கடன் 1.4 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. தற்போது வெளியாகி உள்ள இந்த பரிந்துரை அறிக்கை இந்த கடன் நிலைமையை நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
என்ன பரிந்துரை: மின் உற்பத்தி, விநியோகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகிய துறைகளை கவனிக்கும் வகையில் தனி தனி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று இந்த பரிந்துரையில் கூறப்பட்டு உள்ளது. இதில் தமிழ்நாடு அரசுதான் இனி முடிவு எடுக்க வேண்டும். ஏற்கனவே சில மாநிலங்களில் மின்சார வாரியம் இப்படி 2-3 வகையாக பிரிந்து உள்ளது.
இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் இதே ஐடியா கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பே தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) 2017 இல், மின்சார வாரியத்தை தனி விநியோக மற்றும் உற்பத்தி நிறுவனங்களாக பிரிக்க பரிந்துரைத்தது. ஆனால் அப்போது இந்த மாற்றம் செய்யப்படவில்லை.
டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் சில மாநிலங்கள் அவற்றின் மின் விநியோகம் மற்றும் மின் உற்பத்தி நிறுவனங்களின் பிரிவுக்குப் பிறகு சாதகமான முடிவுகளை பெற்றுள்ளன. அதாவது இந்த துறையை இரண்டாக பிரித்த பின் அவை சாதகமான முடிவுகளை பெற்றுள்ளன.டாங்கெட்கோவை மூன்று நிறுவனங்களாக மாற்றினால், அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி செழித்து திறம்பட செயல்பட முடியும். இதனால் உற்பத்தி அதிகரிக்கும். கடன் அடியோடு குறையும் என்றும் மின்சார துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

கட்டணம் மாற்றம் அறிவிப்பு 2: இது போக தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், நூற்பாலைகளின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து, மின்
கட்டண முறைகளை மாற்றி அமைத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், 2022-23 முதல் 2026-27 நிதியாண்டு வரையிலான காலத்திற்கான பல ஆண்டு கட்டண (Multi Year Tariff) மின்கட்டண மனுவை, மாண்பமை. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (TNERC) முன்பு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO), சமர்ப்பித்தது.
இதனால் ஏற்பட்ட மின்கட்டண மாற்றம் குறித்து, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைப்புகள் தெரிவித்த கோரிக்கைகளைப் பரிசீலித்து, அவர்களது நலனைப் பாதுகாக்கும் வகையில் கட்டணத்தை மாற்றி அமைத்திட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். இதன்படி, TANGEDCOவிற்கு ஆண்டிற்கு ரூ.2,000 கோடி வருவாய் குறைந்தாலும், தொழில்முனைவோரின் நலனைக் கருத்தில் கொண்டு, தொழிற்சாலைகளுக்கு 50 கிலோவாட் வரை உத்தேசித்திருந்த நிலையான கட்டணத்தை மாதம் ஒன்றுக்கு ரூ.100 லிருந்து ரூ.75 எனவும் 50 கிலோவாட்டுக்கு மேல் 100 கிலோவாட் வரை உத்தேசித்திருந்த நிலையான கட்டணத்தை, ரூ.325லிருந்து ரூ.150 எனவும்,- 100 கிலோவாட் முதல் 112 கிலோவாட் வரை உத்தேசித்திருந்த மாதம் நிலையான கட்டணத்தை ஒன்றுக்கு ரூ.500லிருந்து ரூ.150 எனவும், 112 கிலோவாட்டுக்கு மேல் உத்தேசித்திருந்த நிலையான கட்டணத்தை, மாதம் ஒன்றுக்கு ரூ.600 லிருந்து ரூ.550 எனவும். TNERCயின் ஒப்புதல் பெற்று மாற்றியமைக்கப்பட்டது.
இதன் பின்னர், தொழில் மேம்பாட்டிற்கான மேலும் நடவடிக்கையாக, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவு நுகர்வோர்களின் கோரிக்கைகளை ஏற்று, தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கான (LT IIIB) உச்சநேர நுகர்விற்கான மின்கட்டணத்தை 25 சதவீதத்திலிருந்து 15 குறைத்து ஆணையிடப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த குறைக்கப்பட்ட கட்டணங்களுக்கான கூடுதல் மானியமாக ஆண்டிற்கு ரூ.145 கோடி தமிழக அரசு வழங்குகிறது, இதனால் சுமார் 3.37 லட்சம் தாழ்வழுத்த தொழிற்சாலை நுகர்வோர்கள் பயன் பெற்று வருகின்றனர்.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பல ஆண்டு மின்கட்டண ஆணையின் படி, 2023 ஜூலை மாதத்தைப் பொறுத்த வரையில், 2022 ஏப்ரல் மற்றும் 2023 ஏப்ரல் ஆகியவற்றின் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களின் படி கணக்கிட்டால், 4.7 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இந்த நடைமுறையை ஆய்வு செய்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் மாண்பமை ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்தும் போது பொதுமக்களும் தொழில்துறையினரும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். இதன்படி கட்டண உயர்வு விகிதம்
மறுஆய்வு செய்யப்பட்டு, சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், 2022 ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணிற்கு பதிலாக சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் விலை குறியீட்டு எண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனால் கட்டண உயர்வின் அளவு 4.7 ரூ லிருந்து 2.18 ரூ ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தொழில்களின் நலம் காக்க தமிழக அரசு எடுத்துள்ள பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் நூற்பாலைகளின் கோரிக்கைகள் தொடர்பாக மாண்புமிகு நிதி, மனிதவள மேம்பாடு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர், மாண்புமிகு சிறுகுறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்கள் அமைச்சர் மற்றும் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் ஆகியோர்கள் முன்னிலையில் 21.07.2023 அன்று தலைமைச்செயலகத்தில் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஜவுளித் தொழிலின் நிலைத் தன்மையை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கனிவான பார்வைக்கு எடுத்துச் சென்றனர்.
தமிழ்நாட்டில் தொழில்துறையிலும் ஜவுளித்துறையிலும் தற்போது நிலவி வரும் இடர்பாடுகளை ஆராய்ந்து, ஒன்றிய அரசின் பார்வைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கோரிக்கைகளை கடிதம் மூலம் தெரிவித்தும், மின்கட்டணம் தொடர்பான தொழிற்சாலைகளின் கோரிக்கைகளை பரிசீலித்தும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அறிவுறுத்தினார்கள். அதன் அடிப்படையில் கீழ்க்கண்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.
1. பருவகாலத் தேவைக்கு ஏற்ப மாறும் தன்மையுள்ள மின்பளுவை கொண்ட தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு நிலை கட்டணத்தை குறைத்து கொள்ளும் வகையில், அனுமதிக்கப்பட்ட மின்பளுவினை குறைத்துக்கொள்ளவும், மேலும் தேவைப்படும்போது அனுமதிக்கப்பட்ட மின்பளுவிற்குள் உயர்த்திக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை. இச்சலுகையை ஆண்டு ஒன்றுக்கு நான்கு முறை பயன்படுத்திக் கொள்ளலாம்.
2. சூரிய ஒளி சக்தி மேற்கூரை மின் உற்பத்தி செய்ய மின் இணைப்புகளுக்கு 15% மூலதன மானியம் வழங்கப்படும்.
3. 12 கிலோ வாட் க்கு குறைவாக உள்ள சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு வீதப்பட்டி IIB லிருந்து IIIA1 வீதப்பட்டிக்கு மாற்றுவது குறித்து மாண்புமிகு தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்துரு பெற்றபின் பரிசீலிக்கப்படும், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications