உள்ளாட்சி தினம்.. தமிழ்நாட்டில் இன்று முதல்முறை நடக்கும் நகரசபை கூட்டம்! முதல்வர் தொடங்கி வைக்கிறார்
சென்னை: உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுக்க இன்று கிராம மற்றும் நகர சபை கூட்டங்கள் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் முதல்முறையாக இன்று நகர சபை கூட்டங்கள் நடைபெறுகிறது. சென்னை மழைக்கு இடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நகரசபை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
தாம்பரத்தில் பம்மல் 6ம் வார்டில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று தொடங்கி வைக்கிறார். ஆனால் வடகிழக்கு பருவ மழை காரணமாக பல்வேறு இடங்களில் கூட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

கிராம சபை
கடந்த சில வருடங்களாக தமிழ்நாட்டில் கிராம சபை கூட்டங்கள் கவனம் பெற்று நடந்து வருகின்றன. மக்களிடம் நேரடியாக அரசியல் தலைவர்கள் பேசி குறைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்து வருகிறார்கள். முக்கியமாக தமிழ்நாட்டில் திமுக, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் கிராம சபை கூட்டங்களை தீவிரமாக நடத்தி வருகின்றன. குடியரசு தினம், சுதந்திர தினம், தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி, மார்ச் 22, நவம்பர் 1-ல் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் சட்டசபையில் அறிவித்தார்.

பிரச்சனைகள்
கிராம சபை கூட்டங்கள் மூலம் உள்ளூர் பிரச்சனைகள் பல தீர்க்கப்பட்டு வருகின்றன. அதிகாரிகள், ஆட்சியாளர்கள் மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்க கிராம் சபை கூட்டங்கள் உதவியாக இருக்கின்றன. இன்று உள்ளாட்சி தினம் என்பதால் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. அதே சமயம் முதல்முறையாக நகரசபை கூட்டங்களும் இன்று நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இத்தனை காலமாக கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வந்தாலும் நகரசபை கூட்டங்கள் நடத்தப்படாமல் இருந்தது.

கிராம சபை
நகராட்சி, மாநகராட்சி தேர்தல்கள் நடந்து முடிந்து, முழு வீச்சில் செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன. இதையடுத்து நகராட்சி அளவில் மக்களுக்கு இருக்கும் குறைகளை கேட்டறிய கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன. இதையடுத்து தமிழ்நாட்டில் நகர மற்றும் மாநகர சபை கூட்டங்களை நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நகரசபை கூட்டத்தில் கலந்து கொள்கிறார். தாம்பரத்தில் பம்மல் 6ம் வார்டில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று தொடங்கி வைக்கிறார்.

என்ன பேசலாம்
வார்டு வாரியாக கவுன்சிலர்கள் மூலம் இந்த கூட்டம் நடத்தப்படும். இதற்காக கவுன்சிலர்கள் தலைமையில் வார்டு வாரியாக குழு உருவாக்கப்படும். குழு உறுப்பினர்களை கவுன்சிலர்களே தேர்வு செய்வார்கள். அந்த குழு முன்னிலையில் மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க முடியும். நகர பகுதிகளில் தண்ணீர் பிரச்சனை, சாலை பிரச்சனை, மின் விளக்கு பிரச்சனை, கழிவு நீர் பிரச்சனை, மழை நீர் கால்வாய் பிரச்சனை போன்ற பிரச்சனைகளை இதில் விவாதிக்க முடியும். ஆனால் தமிழ்நாடு முழுக்க தற்போது கனமழை பெய்து வருகிறது.

மழை
இன்று தமிழ்நாட்டில் கனமழை தொடரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து உள்ளது. இந்த மழைக்கு இடையே கூட்டம் எப்படி நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் வழக்கு பாயும்.. கறார் காட்டிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு! -
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
ரூ.8,000 கூப்பன்.. திமுகவிற்கு வார்னிங் கொடுத்த தமிழக தேர்தல் அதிகாரி -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications