சென்னைவாசிகள் கவனத்திற்கு.. இன்னும் 3 நாட்களுக்கு கனமழை இருக்காம்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வெளுத்து கட்டி வருகிறது. அதுவும் சென்னையில் பேய்மழை கொட்டியது. கடந்த 2015-ம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் மழை, வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்திலும் கனமழை கொட்டியது. மாநிலத்தில் பல இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்து வரும் நாட்கள் தமிழகத்துக்கு எப்படி இருக்கும்? என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

Tamil Nadu Weatherman has forecast heavy rains in Chennai for 3 days

ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை மன்னார் வளைகுடா / இலங்கையின் பகுதியில் நிலை கொள்ள போகிறது. தெற்கு ஆந்திர பிரதேசத்தில் இருந்து வடக்கு தமிழ்நாட்டில் இருந்து ராமநாதபுரம் பெல்ட் வரை சரியான ஒருங்கிணைப்பை உருவாக்குகிறது.சென்னை உள்ளிட்ட கடலோர தமிழகம் முதல் நாகை வரை 26-ந்தேதி முதல் கனமழை பெய்யத் தொடங்கும், குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு தாழ்வான நிலையில், சரியான மழை பெய்யும்.

டெல்டா பெல்ட் 1 அல்லது டெல்டா பெல்ட் 2 பகுதிகளில் நகர்ந்து அரபிக்கடலுக்கு காற்றழுத்த தாழ்வு நிலை நகர்கிறது. 2005-ம் ஆண்டு போலவே, காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்றன் பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். கடந்த 20 வருடங்களாக சென்னையில் மழைப்பொழிவு புள்ளிவிவரங்களையும் தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ளார்.

1813-ம் ஆண்டு முதல் சென்னையில் அதிக மாதாந்திர மழைப்பொழிவு குறித்த விவரம் பின்வருமாறு:- 1985 (நவம்பர்) - 1,101 மிமீ மழை பெய்துள்ளது. 1918 (நவம்பர்) - 1,088 மி.மீ, 2005 (அக்டோபர்) - 1,078 மிமீ, 2015 (நவம்பர்) - 1,049 மி.மீ என்று சென்னையில் அதிக மழைப்பொழிவு உள்ளது. 2021(நவம்பர்) பொறுத்தவரை 794 மிமீ (1 நவம்பர் - 21 நவம்பர் வரை ) மழை பெய்துள்ளது. இன்னும் கூடுதல் பெய்தால் இந்த மாதம் 1000 மி.மீ மழை அளவை சென்னை எட்டும்.

சென்னையின் பெரு வெள்ள ஆண்டுகள் பின்வருமாறு:-
2005 - 2108 மிமீ (புயல்களின் ஆண்டு)
2015 - 1664 மி.மீ
1888 - 1598 மிமீ (புயல்களின் ஆண்டு)
1946 - 1582 மி.மீ
1997 - 1571 மிமீ (ஒரு சூறாவளி கூட இல்லை)

சென்னையின் சிறந்த ஆண்டு மழைபொழிவு பின்வருமாறு:- 2005 - 2566 மி.மீ
1996 - 2451 மி.மீ,
1943 - 2111 மி.மீ
2015 - 2095 மி.மீ
1847 - 2052 மி.மீ
1997 - 2035 மி.மீ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+