காஞ்சி சங்கரமடத்துக்கு கீழே ராவணன் பிறந்த இடம்- இடித்துவிட்டு ஆய்வு செய்க-திருமுருகன் காந்தி 'பகீர்'
சென்னை: தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு கீழே ராவணன் பிறந்த இடம் இருக்கிறது; ஆகையால் காஞ்சிபுரம் சங்கர மடத்தை இடித்துவிட்டு அகழாய்வு நடத்த வேண்டும் என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நாளில் சென்னையில் தமிழ்த் தேசிய கூட்டணி சார்பாக "தமிழர் மூதாதை! தமிழ் நிலத்து அரசன் இராவணன் திருவிழா" நடைபெற்றது.

"திராவிடப் பழங்குடியினரே இந்தியா முழுமைக்கும் விரவி இருந்தார்கள் என்பதற்கும், இராவணன் திராவிடப் பழங்குடி இனத்தைச் சார்ந்தவனே என்பதற்கும் பல சான்றுகள் உள்ளன. தமிழின் வேர்ச்சொல் அகராதியின்படியும் இராவணன் என்னும் பெயரே அதற்கு எடுத்துக்காட்டு. தமிழ் சொற்களில் 'ர' எனும் ரகரம் முதன்மையாக வராது. அதற்கு முன்பு அ அல்லது இ என்ற எழுத்துகள் வரும். அரவணன் என்பதே சரியானது. அரவணன் என்பதன் வேர்ச்சொல்லின்படி, அரவம் என்றால் பாம்பு என்பது பொருள். அரவணன் என்பதற்கு நாகர்களின் தலைவன் என்று பொருள். அம்பேத்கர் அவர்களின் ஆய்வும் நாகர்களான தமிழர்களே இந்தியம் முழுமையும் இருந்தவர்கள் என்று சொல்கிறது. இவற்றை இணைத்துப் பார்க்கும் போது திராவிடப் பழங்குடிகளான நாகர்களே இம்மண்ணுக்குரியவர்கள் என்பதே தெளிவாகிறது" என்ற அடிப்படையில் இராவணன் திருவிழா நடத்தப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டணி தெரிவித்திருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு ராம பக்தர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் போலீசார் தலையிட்டு அவர்களை அப்புறப்படுத்தினர். இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் திருமுருகன் காந்தி கூறியதாவது: ராவணன் தென்னாட்டைச் சேர்ந்தவன். தமிழ்நாட்டைச் சேர்ந்தவன். ராமாயணம் உண்மை; ராமன் உண்மை எனில் ராவணன் தென்னாட்டைச் சேர்ந்தவன். அவன் சிவபக்தன். அவன் பிறந்தது தமிழ்நாடு என்று சொல்கிறார்கள். ராவணன் பிறந்தது அன்றைக்கு இருந்த மிக பழமையான காஞ்சிபுரம் நகரம்தான் என்கிறோம். காஞ்சிபுரத்தில் சங்கரமடத்துக்கு கீழேதான் ராவணன் பிறந்த பூமி இருக்கிறது. அந்த இடத்தில் தமிழ்நாட்டின் தொல்லியல் துறை அகழாய்வு நடத்தினால் ராவணனின் பூர்வீகத்தை கண்டுபிடிக்கலாம். ஆகையால் தமிழ்நாடு அரசு காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு கீழே அகழ்வராய்ச்சி செய்து ராவணன் பிறந்த இடத்தை கண்டறிய வேண்டும். இவ்வாறு திருமுருகன் காந்தி கூறினார்.

-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications