சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏழைகளின் வயிற்றில் பால் வார்க்கும் தமிழக முதல்வர்- ஐஸ் மழை பொழியும் தமிழிசை

Google Oneindia Tamil News

Recommended Video

    ஏழைகளின் வயிற்றில் பால் வார்க்கும் முதல்வர் - தமிழிசை- வீடியோ

    சென்னை: ஏழைகளின் வயிற்றில் பால் வார்க்கும் தமிழக முதல்வர் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ 2 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் சட்டசபையில் அறிவித்துள்ளார். அதன்படி விவசாய தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், பட்டாசு தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், சலவை தொழிலாளர்கள், மரம் ஏறும் தொழிலாளர்கள், உப்பள தொழிலாளர்கள், காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதி உதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும்.

    Tamilisai Soundararajan praises Tamilnadu CM for announcing Rs 2000 for BPL

    இதன் மூலம் கிராமப்புறத்தில் 35 லட்சம் ஏழை குடும்பங்களும் நகர்ப்புறத்தில் 25 லட்சம் குடும்பங்களும் பயன்பெறும் என முதல்வர் அறிவித்தார்.

    இந்த அறிவிப்பை பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பாராட்டியுள்ளார். அவரது டுவிட்டரில் இது குறித்து அவர் கூறுகையில்,

    ஏழைகளின் வயிற்றில் பால் வார்க்கும் தமிழக முதல்வர் ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் முதல்வருக்கு பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார்.

    அதிமுக- பாஜக இரு கட்சிகளும் திரை மறைவில் கூட்டணி பேரம் பேசிவருவதாக செய்திகள் வெளியாகும் நிலையில் அதிமுகவினர் பாஜகவினரை பாராட்டுவதும், பாஜகவினர் அதிமுகவினரை பாராட்டுவதும் தொடர்கதையாவதை பார்க்கும் போது இவர்களுக்குள்ளான டீலிங்கை சூசகமாக கூறுவது போல் உள்ளதாகவே அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    English summary
    BJP State President Tamilisai Soundararajan tweet by praising Tamilnadu CM Edappadi Palanisamy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X