புதுச்சேரியில் இருந்து தள்ளாடிக்கொண்டு வந்தேனா? சேகர் பாபு சவாலை ஏற்கிறேன்.. டென்ஷனான தமிழிசை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக தேர்தலை அணுவதை போல் திமுக அணுக தயாராக இருந்தால், அமைச்சர் சேகர்பாபுவின் சவாலை ஏற்பதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். கீழடியில் அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட்டதற்கு பாஜக தான் காரணம் என்று கூறிய அவர், சுமார் 10 ஆண்டு காலமாக அறிக்கை ஏற்கப்படாமல் இருப்பதற்கும் விளக்கம் கொடுத்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பாக அமைச்சர் சேகர்பாபு, பாண்டிச்சேரியில் துணை நிலை ஆளுநராக இருந்த காலக்கட்டத்தில் தள்ளாடிக் கொண்டிருந்தவர்களை பார்த்து வந்தவர். அதனால் ஏதுவாக இருந்தாலும், அவருக்கு தள்ளாட்டமாகவே தெரிகிறது என்று விமர்சித்திருந்தார். அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழிசை செளந்தரராஜனை மக்கள் ஏற்காததையும் விமர்சித்திருந்தார்.

Tamilisai Soundararajan reply back to Minister Sekarbabu on his Comment on Election defeat

தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் திமுகவினர் சொல்லி போட்டியிடவில்லை. யார் சொல்லவில்லை என்றாலும், நாங்கள் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுவோம். ஆனால் அமைச்சர் சேகர்பாபு, நாங்கள் தேர்தலை அணுகுவதை போல் அணுக தயாரா?

தேர்தல் தோல்வி

அப்படியென்றால் நான் அவரின் சவாலை ஏற்றுக் கொள்கிறேன். எதைக் கொடுத்து திமுகவினர் எப்படி வாக்குகளை வாங்கினார் என்பதை தேர்தல் களத்தில் நின்று பார்த்து கொண்டுதான் இருந்தேன். தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் திறமையானவர்கள் என்று சொல்லிவிடவும் முடியாது, தோல்வி அடைந்தவர்கள் எல்லோரும் திறமை இல்லாதவர்கள் என்றும் சொல்லிவிட முடியாது.

அதிக வாக்குகள்

நாங்கள் ஒன்றும் தகுதியில்லாமல் தேர்தலில் தோற்றுப் போவதில்லை. தேர்தலில் ஆள் பலம், மனித பலம், பண பலம் என்று அனைத்தும் இருக்கிறது. பாஜக தமிழ்நாட்டில் வளர்ந்து வருகிறது. இதே தென் சென்னை தொகுதியில் கடந்த தேர்தலில் வாங்கிய வாக்குகளை விடவும், 2024ல் அதிக வாக்குகளை பெற்று இருக்கிறோம்.

பாஜக வளர்ந்து வரும் கட்சி

2024ல் மட்டும் 22 தொகுதிகளில் போட்டியிட்டு 18.5 சதவிகித வாக்குகளை பெற்றிருக்கிறோம். கட்சி என்பது மெதுவாகவே வளரும். வளர்ச்சிப் பாதையில் பாஜக உள்ளது. ஆனால் திமுகவை விமர்சிக்கவே கூடாது என்று சேகர்பாபு சொல்ல முடியாது. எப்படியென்றாலும் நாங்கள் விமர்சித்து கொண்டுதான் இருக்கப் போகிறோம். தேர்தல் வெற்றி, தோல்வி என்பது எங்களின் கைகளில் இல்லை.

சேகர்பாபுவுக்கு பதிலடி

புதுச்சேரியில் இருந்து தள்ளாடிக் கொண்டே வந்தேன் என்று சொல்கிறார். எதை சொல்ல வருகிறார்.. ஒரு வருஷமாகியும் தள்ளாடி வருகிறேன் என்றால், டாஸ்மாக் நிறுவனம் மூலமாக வருமானம் பார்த்து கொண்டிருப்பவர்கள் தள்ளாடி இருக்கிறார்களா? சாலைகளில் பள்ளம் இருக்கிறது. திமுக எல்லாவிதத்திலும் தோல்வியடைந்த அரசாக இருக்கிறது.

கீழடி விவகாரம்

கீழடியை பொறுத்தவரை அகழ்வாராய்ச்சி தொடங்கியதே பாஜகவால் தான். அதன் அறிக்கையில் சில சந்தேகங்களை கேட்டிருக்கிறார்கள். உடனடியாக மோடியே தலையிட்டு தமிழின் தொன்மையை எல்லோருக்கும் உணர்த்தக் கூடாது என்று முடிவு செய்ததை போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+