9 பவுன் நகைக்கு இவ்வளவு அடினா.. அமைச்சரின் 1000 கோடி ஊழலுக்கு எவ்வளவு அடி தரணும்? அஜித் குமார் மரணம்.. தமிழிசை ஆவேசம்
சென்னை: 9 சவரன் நகைக்காக இளைஞர் அஜித் குமார் முதுகில் இவ்வளவு அடி அடித்திருக்கிறீர்கள் என்றால், ஆயிரம் கோடி ஊழல் செய்த அமைச்சர்கள் முதுகில் எவ்வளவு அடி அடிக்க வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவதூறாக பேசியதாக திமுக எம்பி ஆ. ராசாவை கண்டித்து சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போராட்டத்தில் ஈடுபட முயன்றார். அப்போது அவரை போலீசார் கைது செய்யும் விதமாக காவல் பேருந்தில் ஏற்றிச் சென்றனர்.
தமிழிசை பேட்டி
இதன்பின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், யாரையுமே போராட்டத்திற்கு வரக்கூடாது என்றால் தமிழ்நாட்டில் ஜனநாயக முறைப்படி ஆட்சி நடக்கிறதா என்று கேட்கிறேன். எதிர்க்கட்சிகளுக்கு போராட உரிமை இருக்கிறது. தமிழகத்தில் என்ன ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை.

போராட்டம் தொடரும்
ஆ. ராசா உள்துறை அமைச்சரை மோசமான வார்த்தையில் பேசுவார். அதை அனுமதிப்பார்கள். ஆனால் நாங்கள் அதைக் கண்டித்து, எங்கள் குரலை எழுப்பினால் அதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் இதற்கு பதில் சொல்ல வேண்டும். மடப்புரத்தில் ஒரு காவலாளி அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். அது எதையும் எங்களால் அனுமதிக்க முடியாது. எங்கள் போராட்டம் தொடரும். நாங்கள் போராடுவோம்.
போராட அனுமதியில்லையா?
எதைப் பற்றியும் நாங்கள் பயப்பட மாட்டோம். ஆ. ராசா பேசியது சரியா என்று தமிழக மக்களிடம் கேட்கிறேன். எவ்வளவு மோசமான வார்த்தையை, ஒரு பெரிய தலைவரை பார்த்து பேசுகிறார். நாங்கள் வந்தவுடன் எங்களை அப்புறப்படுத்துகிறார்கள், கைது செய்கிறார்கள் என்றால், தமிழகத்தில் ஒரு இடத்தில் கூடுவதற்கு கூட இடமில்லையா?
அமைச்சர்கள் மீது அட்டாக்
எங்கள் கண்டன குரலை மடப்புரத்திற்கும் சேர்த்து தான் எழுப்ப வந்துள்ளோம். 9 பவுன் நகை.. குறைந்தது ரூ.4.5 லட்சம் இருக்கும். அந்த நகைக்காக சந்தேகத்துடன் முதுகில் இவ்வளவு அடி அடித்தீர்கள் என்றால், ஆயிரம் கோடி ஊழல் செய்த அமைச்சர்கள் முதுகில் எவ்வளவு அடி அடிக்க வேண்டும்? 9 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடித்து கொலை
அவர்கள் முதுகில் எவ்வளவு அடி அடிக்க வேண்டும். வீடியோவை பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வடிகிறது. தமிழ்நாட்டில் யார் ஆணையின் பேரின் போலீசார் இப்படி செய்திருக்கிறார்கள். சீருடை கூட இல்லாமல் எப்படி துன்புறுத்தினீர்கள்? எப்படி காயப்படுத்தினீர்கள்? பிரேத பரிசோதனை அறிக்கையில் பார்த்தால், அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்.
ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்
30 இடங்களில் உள்காயம் இருக்கிறது. இதற்கு யார் பதில் சொல்வார்கள்? முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கு பதில் சொல்ல வேண்டும். காவல்துறை யார் கையில் இருக்கிறது. கண் துடைப்பு என்பது போல் ஏதோ அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கிறார்கள். இதெல்லாம் போதாது. ஒரு மரணம் என்றாலும் அது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. தூத்துக்குடி சம்பவத்தின் போது எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்தீர்கள்.
உதயநிதி எங்கே?
கனிமொழி எங்கே போனார்? உதயநிதி எங்கே போனார்? கண்டனத்தைப் பதிவு செய்வார்கள். ஏதோ பேருக்கு கண்டனத்தை பதிவு செய்வார்கள். எப்போது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தீர்கள்? எல்லா திருட்டுக்கும் இதே போல் நடவடிக்கை எடுக்கிறீர்களா? இதற்கு மட்டும் இப்படி ஒரு நடவடிக்கை ஏன்? அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆணை இல்லாமல் இது நடந்திருக்க முடியாது. அஜித் குமார் முதுகில் விழுந்த ஒவ்வொரு அடியும், தமிழகத்தில் சாமானியர்களின் முதுகில் விழுந்த அடி என்று தெரிவித்துள்ளார்.
-
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications