அமைச்சர்களை பார்த்தால்.. கரண்டுக்கே காண்டாகுது! திசை திருப்புது தவெக.. வெளுத்து வாங்கிய தமிழிசை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.5-க்கு வாங்க வேண்டியது. ரூ.20-க்கு வாங்கினார்கள். ஆந்திராவிலும் ரூ.20-க்கு வாங்கினார்கள். ஆனால், இப்போது ரூ.37-க்கு வாங்கி, மக்களுக்கு அதிக நஷ்டத்தை ஏற்படுத்துகிறார்கள். கரண்ட் கட் இல்லை என்கிறார்கள். ஆனால், அமைச்சர்கள் செல்லும் நிகழ்ச்சிகளிலேயே கரண்ட் கட் ஆகிறது. கரண்ட்டுக்கே பொறுக்கல. 'நாம கட் ஆகிட்டு இருக்கோம், அவங்க இல்லேனு சொல்றாங்களே' என்று கரண்ட் கட் ஆகிறது என தமிழிசை சௌந்தரராஜன் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை ஓட்டேரி பகுதியில் நடைபெற்ற கொலு திருவிழாவில் முன்னாள் கவர்னரும் தமிழக முன்னாள் பாரதிய ஜனதா கட்சி தலைவருமான தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்துகொண்டு சிறப்பித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Tamilisai Soundararajan Power Cut Chennai Rain

அப்போது பேசிய அவர்," தமிழ்நாடு என்றுமே ஆன்மீக பூமி தான். இதை நான் அடிக்கடி சொல்வதுண்டு. அண்ணா வளர்த்த தமிழ் எல்லாம் ஆண்டாள் வளர்த்த தமிழ். இது பெரியார் மண் அல்ல பெரியாழ்வார் மண் இங்கு ஆன்மீகம் தழைத்து ஓங்க வேண்டும். இதற்கு இது போன்ற ஆன்மீக கொலுக்கள் வைக்கப்பட வேண்டும்.

தமிழிசை சௌந்தரராஜன்

பருவ மழை தொடங்கி விட்டது அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மழைக்கால நோய்களிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.. விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. ரேஷன் அரிசியை யார் சாப்பிடுவது என்பது குறித்து ஒரு விவாதம் நடைபெற்று வருகிறது. அதனால் நிர்வாகம் சீராக இருக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கான நல்லது நடக்கும்.

மின்சார கொள்முதல்

ஒரு யூனிட் 5 ரூபாய்க்கு வாங்க வேண்டியது 20 ரூபாய்க்கு வாங்கினார்கள். ஆந்திராவும் 20 ரூபாய்க்கு வாங்கியுள்ளார்கள். ஆனால் 37 ரூபாய்க்கு வாங்கி மிக அதிகப்படியான நஷ்டத்தை மக்களுக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மேலும் கரண்ட் கட் இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் எங்கெல்லாம் மந்திரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்களோ அங்கெல்லாம் கரண்ட் கட் ஆகிறது. ஏனென்றால் கரண்டுக்கு இது பொறுக்கவில்லை.

கரண்ட் கட்

குறிப்பாக செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் செல்லும் இடங்களில் எல்லாம் கரண்ட் கட் ஆகிறது. கரெக்ட் இல்லை என்பதை யாரும் நம்ப போவதில்லை. கரண்ட் கட் செய்வதால் கொசு கடிக்கிறது. இதனால் டெங்கு வருகிறது. இதனால் டெங்குவையும் கட்டுப்படுத்த வேண்டும் கரண்ட் கட் செய்வதையும் கட்டுப்படுத்த வேண்டும். ஒரு நாள் மழைக்கே சென்னை தத்தளித்துக் கொண்டு உள்ளது. இதை எப்படி சமாளிக்க போகிறது இந்த ஆட்சி என்று தெரியவில்லை.

மழைநீர் வடிகால்

இதற்கு முந்தைய ஆட்சியும் காரணம். மழைநீர் வடிகால் பணிகளுக்கு ரூ.4,000 கோடி செலவிட்டதாகக் கூறுகிறார்கள். அந்தப் பணம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. வடகிழக்கு பருவ மழை வரும் என்று தெரியும். அதைப்பற்றி பேசினால் போர் அடிக்கிறது என்று கூறுகிறார்கள். ஒரு எம்எல்ஏ மழையை பற்றி பேசினால் போர் அடிக்கிறது என்று கூறுகிறார்.

குதிரை பேரம்

எனவே மக்கள் தேவைகளை ஆழ ஆராய்ந்து சரி செய்ய வேண்டும். ஆட்சிக்கு வந்து நான்கு மாதம் தான் ஆகிறது என்று கூறுபவர்கள் நான்கு மாதத்தில் இரண்டு இடைத்தேர்தலை சந்தித்துள்ளார்கள். நான்கு மாதத்தில் இரண்டு இடைத்தேர்தலை சந்தித்ததால் தான் மக்கள் மீது உள்ள கவனம் திசை திருப்பப்பட்டுள்ளது. எனவே இடைத்தேர்தலை நிறுத்திவிட்டு, குதிரை பேரம் போன்றவற்ற நிறுத்திவிட்டு, மக்கள் பணிகளை செய்ய வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+