கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு
சென்னை: சட்டசபைத் தேர்தலில் பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளில் எது என்ற அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதன்படி, மயிலாப்பூர், மொடக்குறிச்சி, உதகமண்டலம், அவிநாசி, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர், ராமநாதபுரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, மானாமதுரை, குளச்சல், பத்மநாதபுரம், ராசிபுரம் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 2 நாட்களாக பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் என்டிஏ கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

அதன்படி எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் பாஜகவுக்கு
- மயிலாப்பூர்
- தளி
- மொடக்குறிச்சி
- உதகை
- அவிநாசி
- திருப்பூர் தெற்கு
- கோவை வடக்கு
- கந்தர்வகோட்டை
- புதுக்கோட்டை
- திருப்பத்தூர்
- மதுரை தெற்கு
- சாத்தூர்
- திருச்செந்தூர்
- வாசுதேவநல்லூர்
- ராதாபுரம்
- நாகர்கோவில்
- விளவங்கோடு
- ஆவடி
- திருவண்ணாமலை
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- அறந்தாங்கி
- ராசிபுரம்
- ராமநாதபுரம்
- பத்மநாபபுரம்
- மானாமதுரை
- குளச்சல்
-ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இம்முறை கோவை வடக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் மதுரையில் வடக்கு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. இம்முறை மதுரை தெற்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிட்ட நெல்லை தொகுதி இம்முறை ஒதுக்கப்படவில்லை. இதனால் சாத்தூர் தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது.
அதேபோல் அண்ணாமலை கடந்த முறை போட்டியிட்ட அரவக்குறிச்சி தொகுதியும் இம்முறை ஒதுக்கப்படவில்லை. சென்னையிலும் துறைமுகம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட தொகுதிகளை அதிமுக கொடுக்கவில்லை. இதனால் அண்ணாமலை சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications