"நேரடியாக நீதிமன்றத்திற்கு வரேன்.! திமுகவுக்கு நன்றி.." பாஜக தலைவர் அண்ணாமலை பரபர! என்ன மேட்டர்
சென்னை: தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாளைய தினம் திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான டி.ஆர். பாலு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசியலில் இப்போது எதிர்க்கட்சியாக மிகவும் ஆக்டிவாக பாஜக செயல்பட்டு வருகிறது. அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாகத் தமிழ்நாடு அரசையும் பாஜகவையும் விமர்சித்தே வருகிறார்.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை திமுகவினர் சொத்து பட்டியல் என்று கூறி ஒன்றை வெளியிட்டார். அதில் திமுகவின் முக்கிய தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது.

அண்ணாமலை: அப்போதே அவர் இது திமுகவினரின் சொத்து பட்டியல் என்றும் ஊழல் பட்டியல் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், இதுவரை தமிழ்நாட்டை ஆட்சி செய்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்றும் கூறியிருந்தார். இது அதிமுக- பாஜக கூட்டணி இடையே ஒரு பக்கம் பரபரப்பை ஏற்படுத்தியது என்றால் மறுபுறம் இது திமுகவினர் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
திமுக மீதான குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ரூ.500 கோடி இழப்பீடு வழங்காவிட்டால் சிவில், கிரிமினல் வழக்கு தொடரப்படும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதைத் தொடர்ந்து திமுகவில் இருந்து மேலும் சிலரும் நோட்டீஸ் அனுப்பினர். அந்த வகையில் திமுக மக்களவை குழு தலைவரான டி.ஆர்.பாலுவும் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார்.
பரபர ட்வீட்: இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், அண்ணாமலை இது தொடர்பாக ட்வீட் செய்துள்ளார். திமுகவினர் சொத்துக் குவிப்பு குறித்த உண்மைகளும் நீதிமன்றம் மூலம் மக்களுக்கு வெளிப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு நன்றி என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தனது ட்விட்டரில், "திமுக பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு சொத்துக் குவிப்பு பற்றிய தகவல்களை, தமிழ்நாடு பாஜக சார்பாக திமுக பைல்ஸ்-இல் வெளியிட்டதைத் தொடர்ந்து, அவர் என் மீது தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நாளை (14/07/2023) நேரில் ஆஜராக உள்ளேன்.
ஊழல் கரையான்: ஊழல் எனும் கரையான், இத்தனை ஆண்டுக் காலம் நமது நாட்டை எப்படி அரித்திருக்கிறது என்றும், அதனை அரசியலிலிருந்து முழுமையாக அப்புறப்படுத்த வேண்டியது எத்தனை முக்கியம் என்பதையும் பொதுமக்கள் அனைவரும் அறிவார்கள்.
நமது மாண்புமிகு நீதித் துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. திமுகவினர் சொத்துக் குவிப்பு பற்றிய அனைத்து உண்மைகளும் மாண்புமிகு நீதிமன்றம் வாயிலாக மக்களுக்கு வெளிப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த திமுகவுக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்!












Click it and Unblock the Notifications