இந்தியாவை காட்டி கொடுத்த கம்யூனிஸ்டுகளே! ஆர்எஸ்எஸ் குறித்து பேச தகுதி உள்ளதா?பாஜக நாராயணன் திருப்பதி
சென்னை: ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை விமர்சித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாராயணன் திருப்பதி கூறியுள்ளதாவது: கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஆர் எஸ் எஸ் தலைவராக இருந்த குருஜி கோல்வால்கர் குறித்தும், பாஜக தலைவர் அண்ணாமலை குறித்தும், பாஜக குறித்தும் தவறான, முறையற்ற விமர்சனத்தை முன்வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

மன்னிப்பு கடிதம் கொடுத்த டாங்கே: கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான எஸ்.ஏ.டாங்கே 1924ம் ஆண்டு பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டபோது மன்னிப்பு கடிதம் எழுதி சிறையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கெஞ்சி கூத்தாடி யது கேவலம் இல்லையா? ரஷ்யா தாக்கப்படுகிறது என்ற ஒரே காரணத்திற்காக, அதற்கு துணை நிற்பதற்காக பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவளித்து 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்ததா இல்லையா?
இந்தியாவை காட்டி கொடுத்த கம்யூனிஸ்டுகள்: 1962 சீன யுத்தத்தின் போது இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட காரணத்திற்காக நாடு முழுவதும் இருந்த கம்யூனிஸ்டுகளை அன்றைய காங்கிரஸ் அரசு கைது செய்து சிறையில் அடைத்ததா இல்லையா? இந்தியாவை காட்டி கொடுத்த கம்யூனிஸ்டுகளுக்கு தேச பக்த இயக்கமான ஆர் எஸ் எஸ் குறித்து பேச தகுதியுள்ளதா?
ஹிந்து மகா சபை, சோம்நாத் சாட்டர்ஜி: மகாத்மா காந்தியை கோட்ஸே கொலை செய்த போது ஹிந்து மகா சபா இயக்கத்தில் இருந்ததும், அன்றைக்கு அந்த இயக்கத்தின் தலைவராக இருந்தவர் நிர்மல் சந்திர சாட்டர்ஜி என்பது பின்னர் அவர் கம்யூனிஸ்டுகள் ஆதரவோடு மக்களவை உறுப்பினரானார் என்பதும், பல்வேறு கம்யூனிஸ்டு குற்றவாளிகளுக்கு வழக்கறிஞராக இருந்தார் என்பதும், அவரின் மகன் தான் பிற்காலத்தில் கம்யூனிஸ்ட் தலைவராக விளங்கிய சோம்நாத் சாட்டர்ஜி என்பதும் உண்மையா இல்லையா?
ஐந்துக்கும் பத்துக்கும் அலையும் கம்யூனிஸ்டுகள்: பாஜக தமிழகத்தில் அழிந்து விட்டது என்று சொல்லும் பாலகிருஷ்ணன் அவர்களே, உலகம் முழுவதும் கம்யூனிஸ்டுகள் வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்பட்டது இன்னும் உங்களுக்கு புரியவில்லையா? தேர்தலில் ஒரு இடத்திற்கு போட்டியிட தி மு கவிடம் கையேந்தி ரூபாய் 5 கோடி பெற்று கட்சியை அடகு வைக்கும் கம்யூனிஸ்டுகளுக்கு, உலகிலேயே அதிக உறுப்பினர்களை பெற்றிருக்கும் கட்சியான பாஜக வை விமர்சிக்கும் தகுதியோ, அருகதையோ இல்லை. தேர்தலுக்கு தேர்தல், ஐந்துக்கும், பத்துக்கும் அலையும் கம்யூனிஸ்டுகள் பாஜகவை விமர்சிப்பதா? இந்தியாவின் சாபக்கேடு கம்யூனிஸ்ட் கட்சி. இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
-
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
ராஜ்மோகன் கொடுத்த நெத்தியடி.. தனியார் பள்ளிகளுக்கு செக்.. அரசியல் பலம், பண பலம் இனி வேலைக்கு ஆகாது! -
தமிழகத்தில் பிறக்கும் குழந்தையின் மீது கடன் சுமை! 4 முக்கிய காரணங்களை சொன்ன வெள்ளை அறிக்கை -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications