ரூ.2756 கோடி.. கூட்டுறவு சங்கங்களில் வாங்கப்பட்ட.. மகளிர் சுய உதவி குழு கடன்கள் தள்ளுபடி: பிடிஆர்
சென்னை: தமிழ்நாட்டில் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை ரூ.2,756 கோடி தள்ளுபடி செய்யப்படும் என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் புதிய பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மீது கவனம் செலுத்தும் வகையில் இன்று முக்கிய அறிவிப்புகள் வெளியானது. முக்கியமான பெண்கள் தொடர்பான பல்வேறு நலத்திட்டங்கள், அறிவிப்புகள் இன்று வெளியிடப்பட்டது.

முக்கியமாக அரசு ஊழியர்களுக்கான பேறு கால விடுப்பானது 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக அதாவது ஓராண்டாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தது. இந்த திட்டத்திற்காக ரேஷன் கார்டை குடும்ப தலைவியின் பெயருக்கு மாற்ற வேண்டியது இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மகளிருக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் நோக்கம் இல்லத்தரசிகளுக்கு நிதியுதவி வழங்குவதே. இதனால் பெயர் மாற்றம் அவசியம் இல்லை. அதே சமயம் இந்த திட்டம் இப்போது மிகவும் ஏழ்மையான குடும்பத் தலைவிகளுக்கானது மட்டுமே என தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது
இந்த நிலையில் இன்னொரு பக்கம் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்ற ரூ2756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பெண்கள் நகர பேருந்துகளில் பயணிக்க இலவச டிக்கெட் திட்டத்திற்காக டீசல் மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டீசல் மானியத்திற்காக ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications