அனைத்து அரசு துறைகளிலும், அலுவலகங்களிலும்.. தமிழை ஆட்சிமொழியாக்க நடவடிக்கை.. பட்ஜெட்டில் பிடிஆர்
சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து துறை அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழியாக பயன்படுத்துவது வலுப்படுத்தப்படும் செம்மொழித் தமிழ் விருது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3ம் தேதி வழங்கப்படும், என்று பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தனது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முழுக்க முழுக்க கணினிமயமாக்கப்பட்ட சட்டசபையில் இ பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார். ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, அரசின் வெளிப்படைத்தன்மை, தமிழ் மொழி வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார்.
முக்கியமான ரேஷன் கடைகளை கணினிமயமாக்கவும், சட்டசபை ஆவணங்களை இணையத்தில் பதவி செய்யவும் வழி வகை செய்யப்படுவது குறித்தும், ஆட்சி மொழி குறித்தும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

கணினி
இன்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் பேசிய போது, வெளிப்படைத்தன்மையில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தும். அனைத்து தகவல்களும் கணினியில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். 1921ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற பேரவை நிகழ்வுகள் குறித்த அனைத்து ஆவணங்களும் கணினி மயமாக்கப்படும். மக்கள் எளிதாக அணைத்து விவரங்களையும் கணினியில் பார்க்கும் வகையில் வசதி ஏற்படுத்தி தரப்படும்.

மின்னணு கொள்முதல்
அதேபோல் பொது விநியோகத் திட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை அமல்படுத்தப்படும். பெரும்பாலான துறைகள் கணினி மயமாக்கப்பட்டு வெளிப்படைத் தன்மை உறுதிப்படுத்தப்படும். செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

தமிழ் ஆட்சி
அனைத்து துறை அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழியாக பயன்படுத்துவது வலுப்படுத்தப்படும் செம்மொழித் தமிழ் விருது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3ம் தேதி வழங்கப்படும். விருதுத்தொகை 10 லட்சம் வழங்கப்படும். நில விவகாரங்கள், கொள்முதல் பிரச்னைகள் தொடர்பான அனைத்து முக்கிய வழக்குகளும் முனைப்புடன் கண்காணிக்கப்படும்.

பொது நிலம்
பொதுநிலங்கள் மேலாண்மைக்கு தனியாக புதிய அமைப்பு உருவாக்கப்படும். ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும். அரா புறம்போக்கு நிலங்கள், முக்கியமான நீர் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 2.05 லட்சம் ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications