சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஆஸ்டர்செனகா".. முதல்வர் ஏன் திடீர்ன்னு இவரை சந்தித்தார்.. நம்பிக்கை தந்த மீட்டிங்.. ஏதோ நடக்கிறது!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் உடன் ஆஸ்டர்செனகா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சிவபத்மநாபன் சந்திப்பு நடத்தியது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது.

Recommended Video

    திடீரென CM MK Stalin-ஐ சந்தித்த AstraZeneca Siva Padmanabhan

    இந்தியாவில் மாநில அரசுகளுக்கு போதுமான தடுப்பூசியை வழங்காமல் மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் மக்களுக்கு போடுவதற்கு வேக்சின் கிடைக்கவில்லை. இதனால் பல மாநில அரசுகள் சர்வதேச வேக்சின் டெண்டர் விட்டுள்ளது.

    இப்படி வேக்சின் டெண்டர் விடப்பட்ட நிலையில், அந்த டெண்டருக்கு பெரிய உலக நிறுவனங்கள் எதுவுமே இதுவரை விருப்பம் தெரிவிக்கவில்லை. உத்தர பிரதேசம் விடுத்த டெண்டருக்கு யாருமே விருப்பம் தெரிவிக்கவில்லை.

    ஆக்ஸ்போர்ட் - ஆஸ்டர்செனகா வேக்சின்.. மனித சோதனை முடிவு வெளியீடு.. 70% தடுப்பாற்றல் கொண்டது ஆக்ஸ்போர்ட் - ஆஸ்டர்செனகா வேக்சின்.. மனித சோதனை முடிவு வெளியீடு.. 70% தடுப்பாற்றல் கொண்டது

    ராஜஸ்தான்

    ராஜஸ்தான்

    ராஜஸ்தான் விடுத்த டெண்டருக்கு சிறிய நிறுவனங்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்தது.அந்த நிறுவனங்களுக்கு அதிக தொகை கேட்டது. மஹாராஷ்டிரா டெண்டர் விட்ட நிலையில், வேக்சின் உற்பத்திக்கு தொடர்பே இல்லாத நிறுவனங்கள் கூட, வேக்சின் டெண்டரில் கலந்து கொண்டது.ஆனால் ஏஜெண்டுகள் மூலம் வேக்சின் கொடுக்க முடியாது என்று ஏற்கனவே மாடர்னா, பைசர் நிறுவனங்கள் அறிவித்துவிட்டன.

    மாநில அரசு

    மாநில அரசு

    நாங்கள் மத்திய அரசுடன் மட்டுமே டீலிங் செய்வோம், மாநில அரசுடன் இல்லை என்று ஏற்கனவே மாடர்னா, பைசர் நிறுவனங்கள் கூறிவிட்டன. இதனால் தமிழக அரசு விடுத்த டெண்டருக்கும் இதேபோல் பதில்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. தமிழக அரசு விடுத்த டெண்டரில் முக்கியமான நிறுவனங்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது.

    நிலைமை

    நிலைமை

    இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் உடன் ஆஸ்டர்செனகா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சிவபத்மநாபன் சந்திப்பு நடத்தி உள்ளார். இந்தியாவில் இயங்கி வரும் ஆஸ்டர்செனகா நிறுவனத்தின் கிளையின் மேலாண்மை இயக்குநராக இவர் இருக்கிறார். நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்த அவர் சில நிமிடங்கள் ஆலோசனை செய்தார்.

    நிவாரணம்

    நிவாரணம்

    முதல்வர் ஸ்டாலினையே சந்தித்து சிவபத்மநாபன், மற்றும் அந்த நிறுவனத்தின் இணை இயக்குநர் அனுராதா குமார் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 50 இலட்சம் வழங்கினர். இது நிவாரண நிதிக்கான சந்திப்பு என்று கூறப்பட்டாலும் இதற்கு பின் வேறு சில காரணங்களும் உள்ளது என்கிறார்கள். இந்தியாவில் உற்பத்தியாகும் கோவிட்ஷீல்ட் வேக்சின் ஆஸ்டர்செனகா நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும்.

    ஆஸ்டர்செனகா

    ஆஸ்டர்செனகா

    ஆஸ்டர்செனகா நிறுவனத்தின் இந்த வேக்சின் சீரம் இன்ஸ்டிடியூட் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் ஆஸ்டர்செனகா மேலாண்மை இயக்குனருடன் முதல்வர் ஸ்டாலினின் இந்த சந்திப்பு நிறைய யுகங்களை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்டர்செனகா நிறுவனத்திற்கு தமிழக அரசு நேரடியாக டெண்டர் கொடுக்க போகிறதோ என்று கேள்வி எழுந்துள்ளது. அதாவது தமிழகத்தின் சர்வதேச வேக்சின் டெண்டரை ஆஸ்டர்செனகா நிறுவனத்திற்கு தமிழக அரசு கொடுக்க எழுந்துள்ளது.

    மீட்டிங்

    மீட்டிங்

    ஏனென்றால் இது போன்ற மீட்டிங்குகள் வெறும் நிவாரணம் தொடர்பான மீட்டிங் என்று ஒதுக்கிவிட முடியாது. இதற்கு பின் கண்டிப்பாக வேக்சின் விற்பனை தொடர்பான காரணங்களும் இருக்கும். இந்த மீட்டிங் காரணமாக மொத்தம் மூன்று விதமான யுகங்கள் எழுந்துள்ளன . ஒன்று சீரம் நிறுவனத்திடம் இருந்து கூடுதல் வேக்சின்களை தமிழகம் நேரடியாக வாங்க வாய்ப்புள்ளது.

    வேக்சின் கொள்முதல்

    வேக்சின் கொள்முதல்

    அது நேரடியாக ஆஸ்டர்செனகா நிறுவனத்திடம் இருந்து வெளிநாட்டு டெண்டர் மூலம் இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளது. இரண்டும் இல்லையென்றால் தமிழகத்திலேயே வேக்சின் உற்பத்தி செய்வதற்காக ஆஸ்டர்செனகா நிறுவனத்தை அழைக்கவும் வாய்ப்பு உள்ளது. இந்த மூன்று விஷயத்தில் எது வேண்டுமானாலும் விரைவில் நடக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    English summary
    Tamilnadu CM M K Stalin meets the Managing director of AstraZeneca Siva Padmanabhan yesterday as the state runs out of vaccine.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X