சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரூ.6230.45 கோடி நிவாரணம்.. 3 முறை கேட்டும் கொடுக்கவில்லை.. அமித் ஷாவிற்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டிற்கான மழை, வெள்ள பாதிப்பு நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று தமிழ்நாடு எம்பிக்கள் குழு நேரில் சந்தித்தது. நீட் தேர்வு ரத்து தொடர்பாக திமுக எம்பி டி ஆர் பாலு தலைமையிலான குழு அமித் ஷாவை சந்தித்தது.

நீட் தேர்வு ரத்து மட்டுமின்றி மற்ற சில விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டிற்கான பேரிடர் நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை டி ஆர் பாலு இன்று அமித் ஷாவிடம் கொடுத்தார்

பீக்கை கடந்துவிட்டோமா! தமிழ்நாட்டில் 2 நாட்களாக நடக்கும் மாற்றம்.. இன்று எத்தனை பேருக்கு கொரோனா? பீக்கை கடந்துவிட்டோமா! தமிழ்நாட்டில் 2 நாட்களாக நடக்கும் மாற்றம்.. இன்று எத்தனை பேருக்கு கொரோனா?

நிவாரணம்

நிவாரணம்

2021 வடகிழக்கு பருவமழையின்போது தமிழ்நாட்டில் வரலாறு காணாத மழை பெய்து சென்னை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தியதை ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள தனது கடிதத்தில் நினைவூட்டியுள்ள முதலமைச்சர், நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை நிறைவேற்ற ஒன்றிய அரசிடமிருந்து ரூ.6230.45 கோடி நிதி உதவி கோரி தனது அரசால் மூன்று முறை கோரிக்கை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பேரிடர்

பேரிடர்


கோவிட்-19 பெருந்தொற்றின் மூன்றாவது அலை ஏற்கனவே பரவியுள்ள சூழலில், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை மாநில அரசு முழுமையாக முடுக்கிவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கான பெரும் நிதித் தேவை மாநில நிதிநிலையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடிய அதே வேளையில், கொரோனா கட்டுப்படுத்துதலுக்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்டாலின் கடிதம்

ஸ்டாலின் கடிதம்

மேலும் ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரத்தை மேலும் கூட்டுவதாக அமைந்திருப்பதையுத் சுட்டிக் காட்டியுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கும் மாநில நிதியிலிருந்து இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்டாலின் அமித் ஷா

ஸ்டாலின் அமித் ஷா

"எனவே, வெள்ளச் சேதங்களுக்கான சீரமைப்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக நிதி விடுவிக்கப்பட்டால் அது மாநில மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்" என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டிற்கு விரைந்து நிதியுதவி அளிப்பதற்குத் தாங்கள் உதவிட வேண்டும், என்று இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ரூ.6,230.45 கோடி நிதியை விடுவிக்க வலியுறுத்தி 3 முறை கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இன்னும் நிதி விடுவிக்கப்படவில்லை. உடனடியாக நிதியை ஒதுக்கினால் தமிழ்நாடு மக்களுக்கு உதவியாக இருக்கும், என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

English summary
Tamilnadu CM Stalin sends letter to Union Minister Amit Shah to release disaster relief fund.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X