Exclusive: வந்து சேருபவர்கள் எல்லாம் சொத்தைகள்.. பாவம் பாஜக.. போட்டுத் தாக்கும் கே.எஸ்.அழகிரி..!
சென்னை: பாஜகவில் இணையும் சொத்தைகளை பற்றி தங்களுக்கு கவலையில்லை எனக் கூறுகிறார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.
மேலும், மழைக்காலம் முடிந்தவுடன் ராகுல்காந்தி தமிழகம் வருவார் என்றும் அப்போது அவர் கலந்துக்கொள்ளும் வகையில் நிறைய நிகழ்ச்சிகளுக்கு தாங்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கிறார்.

இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழுக்கு கே.எஸ்.அழகிரி அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியின் விவரம் பின்வருமாறு;
கேள்வி: காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக உள்ள உங்களால் சுதந்திரமாக செயல்பட முடியாதது போல் தெரிகிறதே, ஏன்?
பதில்: நான் சுதந்திரமாக தான் செயல்படுகிறேன், நிறைய பேசுகிறேன். யாரும் குறுக்கீடு செய்தது கிடையாது, செய்யவும் முடியாது. கூட்டுத்தலைமை மீது நம்பிக்கை கொண்டவன் நான். நான் தலைவராக வந்த பிறகு கட்சியில் கோஷ்டிப்பூசலை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறேன். கொரோனா காலத்தில் மிக அதிகமாக செயல்பட்ட ஒரே அரசியல் இயக்கம் நாங்கள் தான். தனிப்பட்ட முறையில் 4,000 கி.மீ. கொரோனா காலத்தில் இயக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பயணம் செய்திருக்கிறேன்.
கேள்வி: தமிழகத்தில் பலரும் பாஜகவை தேடிச்சென்று இணைகிறார்கள், காங்கிரஸ் கட்சியை யாரும் திரும்பி பார்க்கவில்லையே..
பதில்: பாரதிய ஜனதாவில் யார் இணைகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். பாஜகவில் புதிதாக இணைபவர்களுக்கு மக்கள் மத்தியில் என்ன மரியாதை இருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். மக்கள் அவர்களின் வார்த்தைகளுக்கு செவிமடுப்பார்களா என்பது தான் முக்கியம். ஆகவே, சொத்தை வித்துக்கள் பாஜகவில் சேருவதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. சொத்தைகளை சேர்ப்பதால் பாஜகவுக்கு தான் கூடுதல் சுமை என்பது அந்தக் கட்சியின் தலைவர்களுக்கே தெரியும்.
கேள்வி: தமிழகத்தில் எத்தனை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வலிமையாக உள்ளது?
பதில்: எல்லா தொகுதிகளிலும் எங்கள் கட்சிக்கென்று தனி வாக்கு சதவீதம் உள்ளது. குறிப்பாக தென்மாவட்டங்களில் நாங்கள் மிகுந்த வலிமையுடன் இருக்கிறோம். அதேபோல் மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் கணிசமான செல்வாக்கு இருக்கிறது. இதனால் குறிப்பிட்டு இத்தனை தொகுதிகளில் தான் நாங்கள் வலிமையாக உள்ளோம் எனக் கூற முடியாது. 234 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கென்று மாறாத ஓட்டுவங்கி இருந்து வருகிறது.
கேள்வி: பீகார் தேர்தல் முடிவுகள் பற்றிய உங்கள் பார்வை என்ன?
பதில்: பீகார் தேர்தலை பொறுத்தவரை ஆட்சியில் இருப்பவர்களுக்கும் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனவர்களுக்கும் உள்ள வாக்கு வித்தியாசம் வெறும் 12,700 ஓட்டுக்கள் தான். இதுவரை இந்திய வரலாற்றிலேயே இப்படி ஒரு குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று யாரும் அரசாங்கம் அமைத்ததில்லை. மோடி வெல்ல முடியாதவர் அல்ல என்பதை பீகார் தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டியுள்ளன. ஒரு கூட்டணியில் எந்தக் கட்சி அதிகமாக வெற்றி பெறுகிறது, எந்தக் கட்சி குறைவாக வெற்றி பெறுகிறது என பார்ப்பது முறையல்ல.
பீகாரில் என்ன நடந்திருக்கிறது என்றால், ஆர்.ஜே.டி.யால் வெல்ல முடியாத தொகுதிகளை தான் காங்கிரசுக்கு ஒதுக்கியிருக்கிறார்கள். ஐக்கிய ஜனதா தளம் அமைச்சர்களும், பாஜக அமைச்சர்களும், போட்டியிட்ட தொகுதிகளில் ஆர்.ஜே.டி. போட்டியிடாமல் காங்கிரசுக்கு கொடுத்திருக்கிறார்கள். கூட்டணியில் உள்ள முதன்மையான கட்சி என்ன செய்ய வேண்டும் என்றால், கடினமான தொகுதிகளை அவர்கள் எடுத்துக்கொண்டு எளிதில் வெல்லக் கூடிய தொகுதிகளை தான் கூட்டணிகளுக்கு தர வேண்டும். இதனால் பீகார் தேர்தல் முடிவை வைத்துக்கொண்டு காங்கிரஸ் பலவீனம் அடைந்துவிட்டதாக கூறுவது தவறு.
கேள்வி: காங்கிரஸ் கட்சிக்குள் ஒற்றுமை இல்லாதது போல் தெரிகிறதே, கபில் சிபில் கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: கபில் சிபில் சொல்வதெல்லாம் முற்றிலும் தவறு. ஏன் அவருக்கு இப்போது தான் இதெல்லாம் தெரிகிறதா. காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சராக பதவியை அனுபவித்த போது இப்படி வாய் திறந்திருப்பாரா. பாஜக எந்தக் குரலில் பேசுகிறதோ, அதே குரலில் கபில் சிபிலும் பேசியிருக்கிறார். தாங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு சிலர் பேசி வருகின்றனர். அதிகாரத்தை மையமாக வைத்து செயல்படுபவர்கள் அதிகாரம் இல்லை என்பதற்காக இது போன்று பேசுவார்கள். கட்சி இக்கட்டான தருணத்தில் இருக்கும் போது விரோதிகளுக்கு தூபம் போடும் வகையில் கபில் சிபில் பேசியிருக்கிறார். அவரது கருத்தை கோழைத்தனமானதாக பார்க்கிறேன்.
கேள்வி: ராகுல் காந்தி தமிழகம் வருவாரா..? எப்போது வருவார்..?
பதில்: ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருகை தரவுள்ளார். அவரை வைத்து நிறைய நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். ஏற்கனவே அவர் தமிழகம் வருவதாக திட்டமிடப்பட்டு கொரோனாவால் அது கைவிடப்பட்டது. இந்த முறை நிச்சயம் வருவார். மழைக்காலம் முடிந்தவுடன் ராகுலை நீங்கள் தமிழகத்தில் பார்க்கலாம்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications