தொடர்ந்து குறையும் கொரோனா.. தமிழகத்தில் 23 மாவட்டங்களில் 10க்கும் கீழ் குறைந்த தினசரி வைரஸ் பாதிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 720 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 23 மாவட்டங்களில் 10க்கும் குறைவான நபர்களுக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
ஓமிக்ரான் கொரோனா குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசு கொரோனா கொரோனா கட்டுப்பாடுகளை இந்தாண்டு இறுதி வரை நீட்டித்துள்ளது.
அதேபோல மாநில அரசும் வரும் டிசம்பர் 15ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்துள்ளது. கொரோனா வேக்சின் போட்டவர்களும் கூட பொது இடங்களில் மாஸ்க்குளை அணிய வேண்டும் எனத் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தினசரி கொரோனா பாதிப்பு
இந்நிலையில் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், பீகாரில் மாநிலத்தில் இருந்து திரும்பிய 2 பேர் உட்பட மொத்தம் 720 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 27,26,917 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் 0.7%ஆகத் தொடர்கிறது. அதிகபட்சமாகத் திருப்பூரில் பாசிட்டிவ் விகிதம் 1.5%ஆக உள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்
அதேபோல தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களில் 4 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 5 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். அதிகபட்சமாகத் திருவள்ளூரில் 3 பேரும் சேலத்தில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாநிலத்தில் 36,481 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
புதிய வைரஸ் பாதிப்பு குறைவதால் ஆக்டிவ் கேஸ்களும் குறைகிறது. நேற்று 8,291ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை இன்று மேலும் குறைந்து 8,244ஆக உள்ளது. மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 758 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 26,82,192 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு
மாவட்ட ரீதியான பாதிப்பில் சென்னையில் 115 பேருக்கும் கோவையில் 109 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் பாசிட்டிவ் விகிதம் 0.9%ஆகவும் கோவையில் 1.3% ஆகவும் உள்ளது. இந்த 2 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் தினசரி வைரஸ் பாதிப்பு 100க்கு மேல் இல்லை. அதேபோல அரியலூர், கடலூர் உட்பட மொத்தம் 23 மாவட்டங்களில் தினசரி வைரஸ் பாதிப்பு 10க்கு கீழ் குறைந்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் யாருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications