தமிழகத்தில் 2000க்கு கீழ் குறைந்த தினசரி பாதிப்பு! ஆக்டிவ் கேஸ்களும் 40,000க்கு கீழ் சரிந்தது
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மிக வேகமாகக் குறைந்து வரும் நிலையில், இன்று மாநிலத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்திற்குக் கீழாகக் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஜன. மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. இதையடுத்து மாநிலத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது
அதன் பின்னர் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு வேகமாகக் குறையத் தொடங்கியது. குறிப்பாகக் கடந்த சில நாட்களாகவே பாசிட்டிவ் விகிதம் மிகவும் குறைந்ததால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டன.

தினசரி பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த ஜன. 22இல் 30,700ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு, இப்போது மின்னல் வேகத்தில் குறைந்து வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 95 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் மேற்கு வங்கத்தில் இருந்து திரும்பிய 2 பேர் உட்பட மொத்தம் 1632 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 34,37,896 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள்
தினசரி கொரோனா பாதிப்பு குறைவதால் ஆக்டிவ் கேஸ்களும் மாநிலத்தில் வேகமாக குறைந்து வருகிறது. நேற்றைய தினம் 41,699ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்கள் இன்று 35,951ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் பல வாரங்களுக்குப் பின்னர் ஆக்டிவ் கேஸ்கள் 40 ஆயிரத்திற்குக் கீழாகக் குறைந்துள்ளது. இது தவிர இன்று ஒரே நாளில் மொத்தம் 7,365 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 33,64,013ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பு
ஓமிக்ரான் உச்சம் தொட்ட போது 50 வரை சென்ற தினசரி உயிரிழப்பு கடந்த சில நாட்களாக 20க்குள் தொடர்ந்து இருந்து வருகிறது. அதன்படி மாநிலத்தில் இன்று 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களில் 6 தனியார் மருத்துவமனைகளிலும் 11 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் இதுவரை 37,932 கொரோனா உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட ரீதியாகப் பாதிப்பு
மாவட்ட ரீதியிலான பாதிப்பில் அதிகபட்சமாகத் தலைநகர் சென்னையில் ஒரே நாளில் 341 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து கோவையில் தினசரி பாதிப்பு 305 ஆகவும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 116ஆகவும் உள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், மாநிலத்தின் பாசிட்டிவ் விகிதமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. தமிழகத்தின் ஒட்டுமொத்த பாசிட்டிவ் விகிதம் இப்போது 2.2ஆக உள்ளது.
-
சென்னையை மீண்டும் அலறவிடும் கொரோனா! மருத்துவர் பகிர்ந்த திடுக் தகவல்.. யாருக்கெல்லாம் ஆபத்து? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications