தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா.. இன்று 1548 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்போது 16,749 சிகிச்சை பெற்று வரும் நிலையில், தினசரி உயிரிழப்பும் 16ஆக குறைந்துள்ளது.

கடந்த மே மாதம் தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலை உச்சம் தொட்டது. அப்போது தினசரி வைரஸ் பாதிப்பு 30 ஆயிரம் வரைகூட சென்றது. அந்த சமயத்தில் மாநிலத்திலுள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பின.

இதையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கிற்குப் பின்னரே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு மெல்லக் கட்டுக்குள் வரத் தொடங்கியது.

 தினசரி கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,46,735 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் மொத்தம் 1449 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 76 பேர் 12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் ஆகும். தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 26,71,411 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாகவே மாநிலத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 1 என்றே நீட்டிக்கிறது. அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 2.4% ஆகவும் கிருஷ்ணகிரியில் 2.2% ஆகவும் உள்ளது. மற்ற எந்த மாவட்டத்திலும் பாசிட்டிவ் விகிதம் 2ஐ தாண்டவில்லை. அதேபோல தலைநகர் சென்னையில் பாசிட்டிவ் விகிதம் மாநில சராசரியைவிடக் குறைவாக 0.9%ஆகத் தொடர்கிறது.

 கொரோனா உயிரிழப்புகள்

கொரோனா உயிரிழப்புகள்

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 16 பேரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். அதிகபட்சமாகத் தஞ்சையில் 3 பேரும் சென்னை, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 2 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

 ஆக்டிவ் கேஸ்கள்

ஆக்டிவ் கேஸ்கள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்திற்குள்ளாகவே இருக்கிறது. நேற்று மாநிலத்தில் 16,864ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்கள், இன்று 16,749ஆக குறைந்துள்ளது குறைந்துள்ளது. மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 1548 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 26,18,980 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

 மாவட்ட வாரியாக பாதிப்பு

மாவட்ட வாரியாக பாதிப்பு

மாவட்ட வரியான கொரோனா பாதிப்பில் இன்று தலைநகர் சென்னையில் தான் மோசமாக உள்ளது. தலைநகர் சென்னையில் இன்று மொத்தம் 179 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல கோவையில் 151 பேருக்கும் செங்கல்பட்டில் 113 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 3 மாவட்டங்களில் மட்டுமே இன்று வைரஸ் பாதிப்பு 100ஐ கடந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+