53ஆவது நாளாக மாநிலத்தில் குறையும் கொரோனா.. ஆனால் இந்த 'ஒரு' மாவட்டத்தில் மட்டும் நிலைமை மோசம்தான்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று தொடர்ந்து 53ஆவது நாளாகத் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், மாநிலத்தில் இன்று 2505 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் கடந்த சில நாட்களாகவே வைரஸ் பாதிப்பு அதிகமாகவே உள்ளது.
கொரோனா மூன்றாம் அலை கடந்த மே மாதம் மாநிலத்தில் உச்சமடைந்ததைத் தொடர்ந்து, மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அதன் பின்னரே, தினசரி வைரஸ் பாதிப்பு மாநிலத்தில் குறையத் தொடங்கியது. ஒரு காலத்தில் 35 ஆயிரத்திற்கு மேல் இருந்த வைரஸ் பாதிப்பு தற்போது 3000க்கும் கீழ் குறைந்துள்ளது.

தினசரி கொரோனா பாதிப்பு
இன்று 53ஆவது நாளாக மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 1.40 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரும்பிய ஐந்து பேர் உட்பட 2505 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும், இன்று வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 123 பேர் 12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் ஆகும்

கொரோனா உயிரிழப்புகள்
நேற்று மாநிலத்தில் 36 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், இன்று உயிரிழப்பு 48ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 34 பேர், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 14 பேர் என மொத்தம் 48 பேர் பலியாகியுள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் 11 பேர் எவ்வித இணை நோயும் இல்லாதவர்கள். இதுவரை தமிழ்நாட்டில் 33,502 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
தற்போது மாநிலத்தில் மொத்தம் 31,218 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இன்று மட்டும் 3058 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 24,59,223 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

மாவட்ட ரீதியாக வைரஸ் பாதிப்பு
அதிகபட்சமாக இன்று கோவையில் 282 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஈரோட்டில் 187 பேருக்கும், தஞ்சையில் 185 பேருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தஞ்சை மாவட்டத்தில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இவை தவிரச் சென்னை (160), செங்கல்பட்டு (135), சேலம் (162), திருப்பூர் (148) ஆகிய மாவட்டங்களில் மட்டும் வைரஸ் பாதிப்பு 100க்கு மேல் உள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications