தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளும்.. இந்த சான்றிதழை கட்டாயம் பெறணும்.. அரசு அதிரடி உத்தரவு!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள், மத்திய அரசின் சான்றிதழை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் மத்திய அரசின் (Fit India Movement) என்ற சான்று கட்டாயமாகும். www.fitindia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து அனைத்து வகை பள்ளிகளும் சான்று பெற வேண்டும்.
ஆனால் இதுவரை மிகக்குறைந்த அளவிலான பள்ளிகளே சான்றுக்காக பதிவு செய்துள்ளன. இது ஏற்புடையதல்ல. ஆகவே பதிவு செய்யாத பள்ளிகள் ஜூலை 20-ம் தேதிக்குள் பதிவு செய்து (Fit India Movement) என்ற சான்று கட்டாயம் பெற்றாக வேண்டும்
பள்ளிகள் சான்று பெறுவதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணித்து அறிக்கை தர வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications