ரேஷன் கடைக்கு போகாமலேயே பொருள் வாங்கலாம்! தமிழக அரசின் சூப்பர் டூப்பர் அறிவிப்பு!
சென்னை: வயதானவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி சூப்பரான அறிவிப்பை வழங்கியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் குளிக்கரை கிராமத்தில் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு நியாய விலைக் கடைகளை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ரிப்பன் திறந்து வைத்தார்.
பின்னர் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் திருவாரூர் சட்டசபை உறுப்பினர் பூண்டி கலைவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர்
இந்த நிகழ்ச்சியில் தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், இனி வரும் காலங்களில் ரேஷன் கடைகளில் உள்ள பொருட்களை பாக்கெட்டுகளில் வழங்க வேண்டும் என முதல்வர் கூறியிருக்கிறார். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் யாரும் ரேஷன் கடைக்கு வர முடியவில்லை என்றால் அதற்கு ஒரு திட்டமும் உள்ளது.

நியாய விலைக் கடை விற்பனையாளர்
அதாவது தங்களால் வர இயலவில்லை என்பதற்கான நியாய விலைக் கடை விற்பனையாளரிடம் பெற்று அவருக்கு பதில் வேறொருவரிடம் ரேஷன் பொருட்களை கொடுப்பதற்கு அந்த படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் பரிசீலித்து அனுமதி வழங்குவார்கள்.

மாற்றுத்திறனாளி
முதியோர், மாற்றுத்திறனாளிகள் மட்டும் இல்லை, ரேஷன் கடைக்கு வர முடியாவர்களுக்கு யாரேனும் ஒருவரை நியமித்து பொருட்களை பெற்றுக் கொள்ள முதல்வர் ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்து 14 மாதங்களில் 12,50,000 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்று சக்கரபாணி தெரிவித்தார்.

ரேஷன் பொருட்கள்
வீடுகளுக்கே கொண்டு வந்து ரேஷன் பொருட்களை கொடுக்க வேண்டும் என்பது தேமுதிகவின் வாக்குறுதியாக உள்ளது. இதை பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்திலும் இது போன்ற ஒரு திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கோரிக்கையாகும். குறைந்தபட்சம் அதிகளவு குடும்ப அட்டைகள் உள்ள ரேஷன் கடைகளையாவது இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.












Click it and Unblock the Notifications