பொள்ளாச்சி வழக்கு.. சிபிசிஐடி வசமிருந்து சிபிஐக்கு மாற்றம்.. அரசாணை வெளியீடு
Recommended Video

சென்னை: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தை சிபிஐக்கு மாற்றுவதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் கல்லூரி மாணவிகளையும் பிழைப்புக்காக சிறிய கடைகளில் பணிக்கு செல்லும் இளம்பெண்களையும் காதல் வலையில் சிக்க வைத்து கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த 24-ஆம் தேதி இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தும் விசாரணை மந்தகதியில் நடப்பதாக பல்வேறு தரப்பினர் புகார் கூறினர்.
இதில் அரசியல் கட்சியினரின் வாரிசுகளுக்கு தொடர்பிருப்பதாலேயே விசாரணை மந்தகதியில் நடைபெறுவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி கடந்த 12-ஆம் தேதி தமிழக காவல் துறை டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தார்.
எனினும் பொள்ளாச்சி விவகாரம் சூடு பிடித்து வருவதை அடுத்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாக அறிவித்த சில மணி நேரங்களில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது.
இதையடுத்து அதற்கான அரசாணையை இன்று வெளியிட்டது.












Click it and Unblock the Notifications