சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு பீக் ஹவர் மின் கட்டணம் குறைப்பு! எவ்வளவு கட்டணம் குறையும்?
சென்னை: பீக் ஹவர் மின்சார கட்டணமும், நிலை கட்டணமும் தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை கடுமையாக பாதிப்பதாக தொடர்ச்சியான எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தற்போது இந்த கட்டணத்தை தமிழக அரசு குறைத்திருக்கிறது.
பிரச்னை என்ன? தொடர் கடனில் சிக்கி வரும் மின்துறையை மீட்க தமிழக அரசு சமீபத்தில் சில மாற்றங்களை அறிவித்தது. அதாவது தொழில் நிறுவனங்களுக்கான நிலையான மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் கிலோ வாட் கணக்கில் பயன்படுத்துபவர்களுக்கு யூனிட் 35 இல் இருந்து 153ஆக உயர்த்தப்பட்டது. அதேபோல, பீக் ஹவர் என்று சொல்லக்கூடிய அதிக பயன்பாட்டு நேரமான காலை 6 மணி முதல் 10 வரை 15 சதவீதமும், மாலை 6 மணி முதல் 10 மணி வரை 20 சதவீதமும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. இது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியது.

எதிர்ப்புகள்: இந்த கட்டண உயர்வு குறித்து அரசியல் கட்சிகள் கூறுகையில், "இந்த கட்டண உயர்வால் சிறு, குறு தொழில் நிறுவனங்களும், ஜவுளி துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக கழிவு பஞ்சில் இருந்து தயாரிக்கப்படும் நூலிழைகளைப் பயன்படுத்தி காடா துணி, கலர் நூல்களில் போர்வை, மெத்தை விரிப்பு, லுங்கி, துண்டு, கால்மிதி உட்பட பல துணி வகைகளை தயாரிக்கப் பயன்படுத்தும் நூல்களை உற்பத்தி செய்யும் OE எனப்படும் ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில்களின் மறுசுழற்சி ஜவுளித் துறை பெரும் இழப்புகளை சந்திக்கிறது" என்று விமர்சித்திருந்தனர்.
வேலை வாய்ப்பு: கோவை, திருப்பூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி தொழில்களை நம்பி லட்சக்கணக்கானோர் இருக்கின்றனர். இது தவிர வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கும் இங்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆண்டு தோறும் குறிப்பிட்ட அளவு வெளிநாடுகளுக்கு உற்பத்திகள் ஏற்றுமதியாவதால் அந்நிய செலாவனியும் வருகிறது. இப்படி இருக்கையில் இதனை முடக்கும் வகையில் மின் கட்டண உயர்வு அறிவித்திருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அறிவிப்பு என்ன?: இதன் காரணமாக தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்நிலையில், தற்போது தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கான பீக் ஹவர் மின் கட்டணத்தை குறைப்பதாக தமிழக அரசு கூறியுள்ளது.. மின் பயன்பாட்டை பொறுத்து 15% முதல் 25% வரை மின் கட்டணம் குறைக்கப்படும் எனவும் அரசு தெரிவித்திருக்கிறது. மேலும், சோலார் மேற்கூரை அமைப்பதற்கான நெட்வொர்கிங் கட்டணத்தை 50% வரை குறைக்கும் மின்வாரிய அறிவிப்பால் 7196.10 கோடி இழப்பு ஏற்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மின் கட்டணம் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications