5 பிரச்சனை.. திடீரென டெல்லி பறக்கும் ஆளுநர்.. மோடியுடன் முக்கிய மீட்டிங்.. ரெடியானது ரிப்போர்ட்!?
சென்னை: தமிழ்நாடு அரசியலில் பல முக்கிய திருப்பங்களும், மக்கள் பிரச்சனைகளும் நிலவி வரும் நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லி செல்ல உள்ளார். டெல்லியில் நாளை பிரதமர் மோடியை இவர் சந்திக்கிறார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை கடந்த மாதம் சந்தித்தார். 7 பேர் விடுதலை, நீட் தேர்வு ரத்து, வேக்சின் விநியோகம் என்று பல விஷயங்கள் குறித்து இவர்கள் டெல்லியில் ஆலோசனை செய்தனர். தமிழ்நாடு அரசு சார்பாக பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் வைத்தார்.
இந்த நிலையில், ஒரு வாரம் முன்பு தமிழ்நாடு பாஜக எம்எல்ஏக்கள் 4 பேரும், அப்போதைய பாஜக தலைவர் எல். முருகனும் பிரதமர் மோடியை சந்தித்தனர். இப்படி தொடர்ச்சியாக தமிழ்நாடு தலைவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வருகிறார்கள்.

எப்படி
இந்த நிலையில்தான் தற்போது ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தும் டெல்லிக்கு செல்ல இருக்கிறார். நாளை பிரதமர் மோடியுடன் இவர் சந்திப்பு நடத்த உள்ளார். இந்த சந்திப்பில் ஆளுநர் புரோஹித் மொத்தம் 5 முக்கியமான விஷயங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் பேச இருக்கிறார். அதில் முதல் விஷயம் 7 பேர் விடுதலை தொடர்பானது.

விடுதலை
நிறைவேற்ற

மேகதாது அணை
நான்காவதாக மேகதாது அணை விவகாரம் குறித்தும் இவர்கள் ஆலோசனை செய்ய உள்ளதாக தெரிகிறது. இதில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்து பிரதமர் மோடியிடம் ஆளுநர் ஆலோசிக்க உள்ளார். இது போக 5வதாக தமிழ்நாடு சட்டசபையில் ஜெய் ஹிந்த் கோஷம் தொடர்பாக எழுந்த சர்ச்சை, ஆளுநர் உரையில் இந்த வார்த்தை இடம்பெறாதது குறித்தும் ஆளுநர் புரோஹித் மோடியிடம் விவரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிப்போர்ட்
அதோடு தமிழ்நாடு அரசின் ஆட்சி குறித்தும், அமைச்சர்களின் செயல்பாடு குறித்தும் ஆளுநர் பிரதமர் மோடியிடம் விவரிப்பார். இது தொடர்பாக ஆளுநர் ரிப்போர்ட் ஒன்றை அளிக்கும் வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications