Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வர் ஸ்டாலினுக்கு காலநிலை ஆலோசகராக 'ரணில் அட்வைசர் நார்வே எரிக் சொல்ஹெய்ம்'- புதிய பஞ்சாயத்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவின் காலநிலை ஆலோசகரான சர்ச்சைக்குரிய நார்வே எரிக் சொல்ஹெய்ம், தமிழ்நாடு அரசின் காலநிலை நிர்வாகக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளது சர்ச்சையாகி உள்ளது.

சர்வதேச நாடுகளில் தேசிய இன விடுதலைப் போர் என்பது 1980,90களில் உக்கிரமாக நடைபெற்றது. ஆனால் அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்ப்புக்குப் பின்னர் அத்தனை தனிநாடு கோருகிற இன விடுதலை யுத்தங்களும் பயங்கரவாதம் என முத்திரை குத்தப்பட்டன.

உள்நாட்டு மோதல்கள், இன மோதல்கள் நடைபெறும் நாடுகளில் அமெரிக்கா நேரடியாக தலையிடாது. முதலில் நார்வே நாட்டை இயற்கை வள ஆய்வுக்காக அனுப்பி வைக்கும். பின்னர் சமாதான பேச்சுகளை நார்வே மூலமாக நடத்தும். ஒருகட்டத்தில் அமெரிக்கா என்ன நினைக்கிறதோ அது அந்த நாட்டில் அரங்கேறும். இதுதான் இலங்கையிலும் நடந்தது.

இலங்கையில் எரிக் சொல்ஹெய்ம்

இலங்கையில் எரிக் சொல்ஹெய்ம்

இலங்கையில் தனிநாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்திய விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நார்வே சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. நார்வே சமாதான தூதராக இருந்தவர் எரிக் சொல்ஹெய்ம். இதனால் விடுதலைப் புலிகள் பலவீனப்படுத்தப்பட்டு பின்னர் இல்லாது ஒழிக்கப்பட்டனர். அதாவது விடுதலைப் புலிகளை சமாதானம் என்ற போர்வைக்குள் விழவைத்து அழித்தவர் எரிக் சொல்ஹெய்ம் என்பது ஈழத் தமிழரது குற்றச்சாட்டு.

 எரிக் சொலெஹெய்ம்-க்கு ரணில் திடீர் பதவி

எரிக் சொலெஹெய்ம்-க்கு ரணில் திடீர் பதவி

இதன்பின்னர் நார்வே அமைச்சராக, ஐநா சபையில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார் எரிக் சொல்ஹெய்ம். அண்மையில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவின் காலநிலை ஆலோசகராக எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டார். ஈழத் தமிழரை இனப்படுகொலை செய்து விடுதலைப் புலிகளை அழித்த எரிக் சொல்ஹெய்ம்-க்கு ரணில் பதவி கொடுத்தது பெரும் சர்ச்சையாகவும் இலங்கையில் வெடித்தது.

முதல்வர் ஸ்டாலின் ஆலோசகராக எரிக் சொல்ஹெய்ம்

முதல்வர் ஸ்டாலின் ஆலோசகராக எரிக் சொல்ஹெய்ம்

இந்நிலையில் அதே எரிக் சொல்ஹெய்ம்-க்கு தமிழக அரசும் இப்போது காலநிலை மாற்ற நிர்வாக குழுவில் இடம் கொடுத்திருப்பது சர்ச்சையாகி உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான காலநிலை மாற்ற நிர்வாக குழுவில், பொருளாதார நிபுணரான மாண்டேக் சிங் அலுவாலியா, இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் நந்தன் எம்.நிலக்கேனி, ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் துணை பொதுச் செயலாளர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தின் 6வது செயல் இயக்குநர் எரிக்.எஸ்.சோல்ஹிம், நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் ரமேஷ் ராமச்சந்திரன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆர். சுந்தர்ராஜன், ராம்கோ சமூக சேவைகளின் தலைவர் நிர்மலா ராஜா ஆகியோர் சிறப்பு உறுப்பினர்கள் என அறிவித்துள்ளது. இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவின் காலநிலை ஆலோசகரும் ஈழத் தமிழர் பேரழிவுக்கு காரணமானவருமான எரிக் சொல்ஹெய்ம்க்கு தமிழக அரசு பதவி வழங்கி இருப்பது புதிய சர்ச்சையாகி உள்ளது.

மே 17 கடும் கண்டனம்

மே 17 கடும் கண்டனம்

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில், 1, 46,679 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் சாட்சியமாக இருந்தும், ஏகாதிபத்தியம் மற்றும் சிங்களப் பேரினவாதத்தின் அடிவருடியாக மாறிப்போன எரிக் சோல்ஹேம் எவ்வகையிலும் சூழலியல் நேசனாகிவிட முடியாது. மனித நேயமற்றவரிடத்தில் சூழலியல் நேசத்தைக் காண முடியாது. ஈழத்து கடற்கரை செந்நீராய் மாறியதை கண்டபின்பும் கண்மூடிக் கொண்டவர் தமிழகத்தின் சூழலுக்காய் அக்கரை கொள்வார் என்பது பேதமை மட்டுமா? இனப்படுகொலையான மக்களை குற்றவாளிகூண்டில் ஏற்றும் எரிக்சோல்ஹேம் போன்ற மானுடகுல விரோதியை 'தமிழ்நாட்டின் காலநிலை மாற்றம் ஆலோசனைக்குழுவில்' இணைத்தது கடும் எதிர்ப்பிற்குரியது. பொய்களையும், வன்மங்களையும் அரசியலாக்கி அப்பாவி தமிழர்களை கைவிட்டவரை எதிர்த்து நிற்க வேண்டியது மானத்தமிழரின் மறுக்க இயலா கடமை என விமர்சித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+