தமிழகத்தில் டிச.15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. கேரளாவுக்கு பொது போக்குவரத்தை மீண்டும் தொடங்க அனுமதி

Subscribe to Oneindia Tamil

தமிழகத்தில் டிச.15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. கேரளாவுக்கு பொது போக்குவரத்தை மீண்டும் தொடங்க அனுமதி

சென்னை: தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், கேரளாவுக்கு பொது போக்குவரத்தை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னரே உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது.

அதைத் தொடர்ந்து வைரஸ் பாதிப்பு குறைய குறைய, பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அமலில் இருந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைவதாக இருந்தது.

ஊரடங்கு நீட்டிப்பு

ஊரடங்கு நீட்டிப்பு


இந்தச் சூழலில் வரும் டிசம்பர் 15ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் முதலில் வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்ததால், கேரளா உடனான பொது போக்குவரத்து மட்டும் தொடங்கப்படாமல் இருந்தது.

கேரளா உடன் பொது போக்குவரத்து

கேரளா உடன் பொது போக்குவரத்து

இந்நிலையில், தற்போது அங்கும் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ள நிலையில், கேரளா உடனான பொது போக்குவரத்தை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முடியவில்லை என்பதால் பொதுமக்கள் அனைவரும் வேக்சின் போட்டுக்கொள்ள வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார். தடுப்பூசி போட்டவர்களும் கூட பொது இடங்களில் கண்டிப்பாக மாஸ்க் போட வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முதல்வர் உத்தரவு

முதல்வர் உத்தரவு

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்துள்ள உத்தரவில், "தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு ஆணை எண்.753, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 18.11.2021ன்படி, 30.11.2021 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் 30.11.2021 நாளிட்ட கடிதத்தில் கொரோனா நோய்த் தடுப்புக் கட்டுப்பாடுகள் 31.12.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை

வடகிழக்குப் பருவமழை

இதனைத் தொடர்ந்து கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய அவசியம் கருதியும், தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, தொடர் மழை பெய்து வருகின்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், பொதுமக்கள் நலன் கருதி நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் 15-12-2021 வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது. ஏற்கெனவே ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மாநிலங்களுக்கிடையே பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதைப் போன்று கேரள மாநிலத்திற்கும் பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.

பொது

பொது

செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்துக் கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் கீழ்க்கண்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

* கடைகளின் நுழைவுவாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் (hand sanitizer with dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்பநிலை பரிசோதனைக் கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் (thermal screening).

* கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

* கடைகளில், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக் கூடாது.

* கடைகளின் நுழைவு வாயிலில் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும்போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

நோய்த் தொற்று கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்

நோய்த் தொற்று கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்

* நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களைக் கண்டறிதல், நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுதல் (Test-Track-Treat-Vaccination-Covid-19 Appropriate Behaviour) ஆகிய கோட்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.

* கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு, நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை (Micro Level) வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.

* நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்தியாவசியச் செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகள் அனுமதி இல்லை.

* நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், தீவிரமாக நோய்த் தொற்றுப் பரவலை, வீடு வீடாகக் கண்காணிக்கக் குழுக்கள் அமைத்துக் கண்காணிக்கப்படும்.

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொதுமக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.

கொரோனா நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளத் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மாஸ்க் போடுங்கள்

மாஸ்க் போடுங்கள்

மேலும், தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் கூட, கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றைக் கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை/ சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+