Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"குரோமோசோம்கள்".. ரத்த உறவு திருமணங்கள்.. தடதடக்கும் தமிழ்நாடு.. குண்டை தூக்கி போட்ட ஆய்வு..!

ரத்த சொந்தத்தில் திருமணம் செய்வது தமிழகத்தில் அதிகமாக உள்ளதாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரத்த சொந்தத்தில் திருமணம் செய்ய கூடாது என்று டாக்டர்கள் அறிவுறுத்தி வரும் நிலையில், தொடர்ந்து அதே பிரச்சனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதிலும் தமிழ்நாட்டில்தான் அதிக அளவு ரத்த பந்தத்திலேயே திருமணம் செய்வது அதிகமாக நடக்கிறதாம்.

ரத்த சொந்தத்தில் திருமணம் செய்ய கூடாது என்று டாக்டர்கள் சொல்லி வருகிறார்கள்.. மனிதர்கள் ஒவ்வொருவருக்கும், 46 குரோமோசோம்கள் இருக்கும்.

இதில், 23 குரோமோசோம்கள் அப்பாவிடம் இருந்தும், 23 குரோமோசோம்கள் அம்மாவிடம் இருந்தும் வருகின்றன. அதனால்தான், உருவ அமைப்பு, பழக்க வழக்கங்களில் பெற்றோர் போலவே, குழந்தைகளும் உள்ளனர்... அது போலவேதான், பெற்றோர் உடல் நலப் பிரச்னைகளும் குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன.

 குரோமோசோம்

குரோமோசோம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இடையே, ஒரே மாதிரியான குரோமோசோம்கள் இருக்கும் என்பதால், அத்தகையோருக்கு பிறக்கும் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளாக பிறக்க வாய்ப்பு அதிகம்... அதே நேரத்தில், நெருங்கிய சொந்தங்களை தவிர, வெளியே இருந்து திருமணம் செய்வதால், புது வகையான குரோமோசோம்கள் இருக்கும்.. இந்த குழந்தைகள் மாற்றுத் திறனாளிகளாக பிறப்பதற்கான வாய்ப்புகளும் குறைவு.

 குரோமோசோம்கள்

குரோமோசோம்கள்

அதனால்தான் சொந்தத்தில் திருமணம் செய்யக்கூடாது என்று சொல்லி வருகிறார்கள்.. மரபணு பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது... சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய் போன்றவைகளும் வருகின்றன. கண் பார்வை குறைபாடு, தசை நார்கள் பிரச்னை, உயர வளர்ச்சி குறைபாடு, பருவம் அடையாமல் இருப்பது, திருநங்கையாக பிறப்பது எல்லாமே இந்த குரோமோசோம் ஏற்படுத்தும் பிரச்சனைகள்தான். தற்போது இதுகுறித்து விழிப்புணர்வு நிறைய ஏற்பட்டுள்ளதால், இந்த ரத்த பந்த திருமணங்கள் ஓரளவு குறைந்துள்ளதாக கருதப்பட்டது.

 சுகாதார அமைப்பு

சுகாதார அமைப்பு

ஆனால், அப்படி எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று ஒரு ஆய்வு சொல்கிறது.. அதிலும், தென் மாநிலங்களில் ரத்த உறவு திருமணங்கள் தான் அதிகளவில் நடந்து வருகிறதாம்.. அதிலும் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளதாம்.. தேசிய குடும்ப சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த நிலவரம் தெரியவந்துள்ளது.. அந்த ஆய்வின்படி, ரத்த உறவு திருமணங்களில் கர்நாடகம் 2-வது இடத்தை பிடித்து உள்ளது... கர்நாடகத்தில் 27 சதவீத மக்கள் ரத்த உறவில் திருமணம் செய்து கொள்வது சகஜமாக நடக்கிறதாம்.

 ரத்த சொந்தம்

ரத்த சொந்தம்

கர்நாடகத்தில் 9.6 சதவீத பெண்கள், தங்கள் அப்பா வழி ரத்த உறவிலும், 13.9 சதவீத பெண்கள் அம்மா வழி ரத்த உறவிலும் திருமணம் செய்து கொள்கின்றனர்... இந்த ரத்த உறவு திருமணங்கள் மூலம் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது... இதனை தடுக்க ரத்த உறவு முறை திருமணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் டாக்டர்கள் சற்று அதிகமாகவே அறிவுறுத்தி உள்ளனர்.

 ரத்த உறவு

ரத்த உறவு

தென்மாநிலங்களில் ரத்த உறவு திருமணங்களில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.. இங்கு மட்டும் 28 சதவீதம் ரத்த உறவு திருமணங்கள் நடப்பதாக அந்த ஆய்வு சொல்கிறது.. ஆந்திராவில் 26 சதவீதமும், புதுச்சேரியில் 19 சதவீதமும், தெலுங்கானாவில் 18 சதவீதமும் ரத்த உறவு திருமணங்கள் நடப்பதாக தகவல்கள் கூறுகின்றன..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+