"இரும்பின் காலம்" பெருமைப்பட்டால் போதாது.. ஊழலையும் ஒழித்து காட்ட வேண்டும்.. சென்னை ஐகோர்ட் கருத்து!
சென்னை: தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியது என்று பெருமை கொள்ளும் அதே நேரத்தில், தமிழ்நாட்டில் ஊழலையும் ஒழிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இரும்புக்கரம் கொண்டு ஊழலை ஒழித்து கட்டினால், அதிலும் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருக்கும் என்றும் நீதிபதி சுப்ரமணியம் கூறியுள்ளார்.
நேற்று முன் தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை நாளை வெளியிடுகிறேன் என்று பதிவிட்டிருந்தார். இதனால் மு.க.ஸ்டாலின் என்ன அறிவிப்பை வெளியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த நிலையில், "இரும்பின் தொன்மை" என்ற புத்தகத்தை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பு காலம் தொடங்கி இருக்கிறது.

5,300 ஆண்டுகளுக்கு முன்பாகவே உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகமாகிவிட்டது. தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு மூலமாக கிடைத்த கணக்கீடுகள், இரும்பு அறிமுகமான காலத்தை கி.மு.4000 ஆண்டின் முற்பகுதிக்கு கொண்டு சென்றிருக்கிறது. 5,300 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதை அறிவியல் அடிப்படையில் நிறுவி இருக்கிறோம்.
இது தமிழ்நாட்டிற்கு, தமிழினத்திற்கு, தமிழ் நிலத்திற்கும் பெருமை. இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்பட வேண்டும் என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறேன். அதனை மெய்ப்பிக்கும் ஆய்வுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை தொடர்ச்சியாக செய்து வருகிறது என்று பெருமிதம் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்எம் சுப்ரமணியம் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இரும்பு காலத்தின் முன்னோடி தமிழ் நிலப்பரப்பு என்று பெருமை கொள்ளும் அதே நேரத்தில் ஊழலையும் ஒழிக்க வேண்டும். ஊழலை இரும்புக்கரம் கொண்டு ஒழித்து காட்டினால், தமிழ்நாடு ஊழலை ஒழிப்பதிலும் முன்னோடு மாநிலமாக இருக்கும். அதனையும் செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications