சரியும் கொரோனா.. 27 மாவட்டங்களில்.. மிக முக்கிய தளர்வுக்கு திட்டமிடும் தமிழ்நாடு அரசு? - பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் ஆக்டிவ் கேஸ்கள் குறைவாக இருக்கும் 27 மாவட்டங்களில் மட்டும் முக்கியமான சில தளர்வுக்கு அனுமதி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி உள்ளது. தினசரி கேஸ்கள் வேகமாக சரிந்து வரும் நிலையில், வரும் நாட்களில் கேஸ்கள் 10 ஆயிரத்திற்கும் கீழ் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தமிழ்நாட்டில் தற்போது 21ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. 27 மாவட்டங்களில் அதிக தளர்வுகளும், 11 மாவட்டங்களில் குறைவான தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன.

27 மாவட்டங்கள்

27 மாவட்டங்கள்

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் கொரோனா குறைவாக உள்ளதால் சலூன்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் டீ கடைகள் இயங்கவும் இங்கே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாற்றம்

மாற்றம்

இந்த நிலையில் வரும் வாரம் இங்கு கூடுதல் தளர்வு கொண்டு வரப்படும் என்கிறார்கள். 21ம் தேதிக்கு பின் 27 மாவட்டங்களில் பேருந்து பயணங்கள் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். பொருளாதார நடவடிக்கைகளை தொடங்கும் வகையில் இது அனுமதிக்கப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன.

எங்கு

எங்கு

27 மாவட்டங்களில் மட்டும், மாவட்டங்களுக்கு உள்ளேயே பேருந்து பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும், மாவட்டங்களுக்கு இடையில் பேருந்து பயணம் தொடங்க வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் வருகின்றன. பொது போக்குவரத்து குறித்து இன்னும் முழுமையான முடிவு எடுக்கப்படாத நிலையில், இது தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முடிவு

முடிவு

விரைவில் பேருந்துகளை இயக்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். அதேபோல் இ பதிவு முறையிலும் தளர்வுகள் வரலாம். 11 மாவட்டங்களில் இருக்கும் சில இ பதிவு விதிகளில் 21ம் தேதிக்கு பிறகு தளர்வுகள் வரலாம் என்று கூறப்படுகிறது. இந்த வார இறுதியில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+