நலிவுற்ற மக்கள் தாமாக தனி வீடு கட்டிக் கொள்ள ரூ1 லட்சம் மானியம்: சட்டசபையில் சூப்பர் அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் நில உரிமை உள்ள நலிவுற்ற மக்கள் பயன் பெறும் வகையில் தாமாக வீடுகட்டிக் கொள்ளும் திட்டத்தின் கீழ் 1 இலட்சம் தனி வீடுகள் கட்டிக் கொள்ள மானியம் வழங்கப்படும் என்று நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டசபையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்ட அறிவிப்புகள்:

1.தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளின் புனரமைப்பு பணிகள் ரூ.70 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
2.நில உரிமை உள்ள நலிவுற்ற மக்கள் பயன் பெறும் வகையில் தாமாக வீடுகட்டிக் கொள்ளும் திட்டத்தின் கீழ் 1 இலட்சம் தனி வீடுகள் கட்டிக் கொள்ள மானியம் வழங்கப்படும்.
3.தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் நலனுக்காக நாவலூர் திட்டப்பகுதியில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு திடல் அமைக்கப்படும்.
4.பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு திட்டப்பகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் தொழிற் பயிற்சி கூடம் அமைக்கப்படும்.
5.தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிகளில் வசிக்கும் மகளிர் மேம்பாட்டிற்காக 2000 மகளிருக்கு சிறப்பு சுயதொழில் பயிற்சி வழங்கப்படும்.
6.ஈரோடு மாவட்டம் ஈரோடு வட்டம் நல்லகவுண்டன்பாளையம் திட்டப்பகுதியில் கடைகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவை ரூ. 1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
7.தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிகளில் வசிக்கும் விளையாட்டில் ஆர்வம் உள்ள திறமையானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
8.தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 5000 நபர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் தா.மோ. அன்பரசன் அறிவித்தார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications