பெட்ரூமில் வேட்டியில் தூக்கிட்ட மாஜி தலைவர் வெங்கடாசலம்.. இதுதான் காரணமா.. என்ன நடந்தது.. பரபர தகவல்
மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்டாசலம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்
சென்னை: தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்டாசலம் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார்... இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்கொலைக்கான காரணங்கள் என்ன என்று உறுதியாக தெரியவில்லை... தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
சேலம் மாவட்டம், ஆத்துார் அம்மாம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம்.. இவருக்கு 63 வயதாகிறது.. 1983ல் ஐஎப்எஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்று, வனத்துறையில் சென்னை உட்பட பல இடங்களில் பணி புரிந்தவர்.
கடந்த அதிமுக ஆட்சியில், 2019ல், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக வெங்கடாசலம் நியமனம் செய்யப்பட்டார்.. 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் வெங்கடாச்சலம் ஓய்வு பெறவும் இருந்தார்..

சோதனை
ஆனால், அதற்குள், செப்டம்பர் மாதம் 23-ம் தேதி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம், அவரது வீடு உட்பட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையை துவங்கினர். அதேபோல் அவரது வங்கி லாக்கரில் சோதனை நடத்தப்பட்டது.. இந்த புகாரில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.. அதிகார துஷ்பிரயோகம் செய்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வருவதாக ஏற்கனவே வெங்கடாசலம் மீது குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில், அதுகுறித்து எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது..

ஆட்சி மாற்றம்
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர், வீரமணி ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சமீபத்தில் சோதனை நடத்தியபோதுதான், வெங்கடாசலம் பெயர் பலமாக அடிபட்டது. மாஜிக்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணம் ஒன்றில், சிபாரிசு காரணமாக, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் ஆட்கள் தேர்வு மற்றும் டெண்டர் விவகாரம் குறித்த பதிவுகள் சிக்கியதாகவும், அதனால்தான் வெங்கடாசலம் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார், சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டன.

ஆவணங்கள்
வெங்கடாசலம் வீடு, அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 6.5 கிலோ தங்கம், ரூ.13.5 லட்சம் பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.. இந்த வழக்கின் விசாரணையும் தொடர்ந்து நடந்து வந்தன.. இந்நிலையில்தான் வேளச்சேரியில் உள்ள தன்னுடைய வீட்டில், வெங்கடாசலம் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. இதற்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.. எனினும் இதுகுறித்த சில தகவல்கள் கசிந்து வருகின்றன..

பெட்ரூம்
நேற்று மதியம் மாடியில் உள்ள தன்னுடைய பெட்ரூமுக்குள் சென்றிருக்கிறார் வெங்கடாசலம்.. அப்போது, வேலைக்கார பெண் செல்வி என்பவர் மதிய உணவு எடுத்து சென்று, அவருக்கு தந்துவிட்டு திரும்பி வந்துள்ளார்.. அதற்கு பிறகு தான் வெங்கடாசலம் தன் ரூம் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுள்ளார்.. நீண்ட நேரமாக கீழே இறங்கியும் வரவில்லை.

தற்கொலை
சாயங்காலம் 5.30 மணி ஆகியும், அவர் கீழே இறங்கி வராமல் இருந்ததால், சந்தேகப்பட்டு அவருடைய மனைவி, மாடிக்கு சென்று பார்த்துள்ளார்.. அப்போது ரூம் கதவு உள்புறமாக பூட்டி இருந்திருக்கிறது.. கதவை தட்டியும் வெங்கடாசலம் கதவை திறக்கவில்லை என்பதால்தான், குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். ஃபேனில் தன்னுடைய வேட்டியால் வெங்கடாசலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

வேளச்சேரி போலீஸ்
மதியம் கொண்டு வந்து வைத்திருந்த சாப்பாட்டையும் அவர் சாப்பிடாமல் இருந்துள்ளார்.. இதையடுத்து, மாலையில், வேளச்சேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, 2 மணிநேர விசாரணைக்கு பிறகே, வெங்கடாசலம் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கொடுக்கப்பட்ட மன அழுத்தம் காரணமாக வெங்கடாசலம் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை ஆரம்பமானது..

வெங்கடாசலம்
கடந்த சில நாட்களாகவே கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தாராம் வெங்கடாசலம்.. சோதனையின்போது, ஏராளமான பணம், நகைகள் பறிபோனதால், வெங்கடாச்சலத்துக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி இதுகுறித்து தகராறு நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுவும் மன உளைச்சலுக்கு காரணமாகி உள்ளது.. இதனிடையே தன் மனைவிக்கு 3 லட்ச ரூபாயையும், வீட்டில் பணிபுரியும் வேலைக்கார பெண்மணிக்கு சிறிது பணத்தையும் வெங்கடாச்சலம் தந்திருக்கிறார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாம்..

உண்மை என்ன?
தற்கொலை செய்து கொள்வது குறித்து ஏற்கனவே வெங்கடாசலம் முடிவெடுக்கவும்தான், இந்த பணத்தை அவர்கள் 2 பேருக்கும் தந்திருக்ககூடும் என்கிறார்கள்.. இப்போதைக்கு முதல்கட்ட விசாரணை மட்டுமே நடந்து முடிந்துள்ள நிலையில், தொடர் விசாரணை நடந்து வருகிறது.. வெங்கடாச்சலம் தற்கொலை சம்பந்தமாக போலீஸார் 174 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து இந்த விசாரணையை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை
வெங்கடாசலம் தற்கொலைக்கு உண்மையான காரணத்தை விரைவில் போலீசார் வெளியிடுவார்கள் என்றும் கருதப்படுகிறது.. எனினும், லஞ்ச ஒழிப்பு மற்றும் வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், வெங்கடாசலம் தற்கொலை செய்து இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.. போலீஸார் நடத்திய விசாரணையில் அவரது செல்போனையும் போலீஸார் கைப்பற்றி சைபர் கிரைமுக்கு அனுப்பியுள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications