தமிழகத்தில் புதியதாக 512 பேருக்கு கொரோனா- 8 பேர் உயிரிழப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் மொத்தம் 8 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,90,281 ஆக உள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,53, 751 ஆகும்.

 Tamilnadu Records 512 new coroavirus case and 8 Deaths

இந்திய மாநிலங்களில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இன்று 56,098 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

இதில் 512 பேருக்கு கொரோனா உறுதியானது. தமிழகத்தில் மொத்தம் 1,54,97,552 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,36,315 ஆக உள்ளது.

இன்று மட்டும் மொத்தம் 564 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகினர். கொரோனா பாதிப்புக்குப் பின்னர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள் மொத்த எண்ணிக்கை 8,19,306.

தமிழகத்தில் இன்று மட்டும் 8 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். தமிழகத்தில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 12,333.

சென்னையில் மேலும் 159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இன்று சென்னையில் மட்டும் 4 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கோவையில் 51; செங்கல்பட்டில் 28 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+